Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக 6 பேர் கைது

Print PDF

தினமணி            26.09.2013 

அனுமதியின்றி மரங்களை  வெட்டியதாக 6 பேர் கைது

பல்லடம் நகராட்சியின் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 6 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
  • பல்லடம் நகராட்சி சி.டி.சி காலனியில் 5 வேப்ப மரங்களும், 10 வாகை மரங்களும் வெட்டி கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நகராட்சித் தலைவர் சேகர், ஆணையாளர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் ஜலஜா ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதி இன்றி மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது.
  • இதுதொடர்பாக சதீஷ் (25), மயில்சாமி (37), கோபால் (33), குப்புசாமி (35), சுப்பன் (75), டைடாஸ் (67) ஆகியோரை பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு கைது செய்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
 

தொழில் வரியை உயர்த்த திருப்புவனம் பேரூராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினமணி            26.09.2013 

தொழில் வரியை உயர்த்த திருப்புவனம் பேரூராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தொழில் வரியை உயர்த்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் வசந்தி சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது.

 செயல் அலுவலர் முனியான்டி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

 அதன்பின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்துப் பேசினர். இதற்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன விவரம்:

 திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் தொழில் வரியை அக்டோபர் மாதம் முதல் 35 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க முடிவு செய்யப்படுகிறது.

 மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 3 லட்சம் செலவில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சமையல் கூடம் மற்றும் மத்திய அமைச்சர் வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நகரில் 1ஆவது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வாளாகம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

காங்கயம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு

Print PDF

தினத்தந்தி            26.09.2013 

காங்கயம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு

 

 

 

 

வாடகை பணம் செலுத்தாததால் காங்கயம் பஸ் நிலையத்தில் உள்ள 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாடகை பணம் செலுத்தவில்லை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இந்த வாடகை பணம் நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் தங்கவேல் என்பவர் கடந்த 3 மாத காலமாக நகராட்சிக்கு வாடகை பணம் கட்டவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் தங்கவேலுவிடம் நகராட்சி சார்பில் விளக்கம் கேட்டும் சரிவர பதில் அளிக்கவில்லை.

3 கடைகளுக்கு சீல் வைப்பு

இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ம.தமிழரசு, வாடகை கட்டாத தங்கவேலுவின் கடைக்கு சீல் வைத்தார்.

மேலும் பஸ்நிலையத்தில் தாட்கோ வணிக வளாகத்தில் கடை வைத்து இருக்கும் உஷா என்பவரும் கடந்த 5 மாதங்களாகவும், சென்னியப்பன் என்பவர் கடந்த 6 மாத காலமும் வாடகை பணம் செலுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால் மேற்கண்ட இரு கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 


Page 105 of 506