Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவை குறிச்சி குளத்தில் கட்டிட கழிவுகளை கொட்டிய லாரி பறிமுதல்

Print PDF

தினத்தந்தி            26.09.2013 

கோவை குறிச்சி குளத்தில் கட்டிட கழிவுகளை கொட்டிய லாரி பறிமுதல்

 
 
 
 
 
 
 
 
கோவை மாநகராட்சி பகுதியில் கட்டிட இடிமான கழிவுகளை கொட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை தவிர வேறு எங்காவது கொட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவில் குறிச்சி குளத்தில் கட்டிட கழிவுகள் லாரி மூலம் கொட்டப் படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, கட்டிட கழிவுகளை கொட்டிய அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் அங்கு கட்டிட கழிவுகளை ஏற்றி வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

சென்னை மாநகராட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1–ந்தேதி வெளியீடு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            26.09.2013 

சென்னை மாநகராட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1–ந்தேதி வெளியீடு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

 
 
 
 
 
 
 
 
 
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2014–ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 13–ம் மண்டல அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி கட்டிடங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் அக்டோபர் 1–ந்தேதி வெளியிடப்படுகிறது.
 
வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்று சரிபார்த்துக் கொள்வதுடன், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் செய்ய வேண்டியவர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவண நகல்களுடன் அக்டோபர் 1–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும், அக்டோபர் 6, 20, 27–ந்தேதிகளில் (ஞாயிற்றுகிழமைகளில்) வாக்குச்சாவடிகளிலும் இந்த பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
 

‘அம்மா’ உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்ண சீருடை தலை, கைக­ளுக்கு உறை அணி­யா­விட்டால் நட­வ­டிக்கை

Print PDF

தினமலர்          23.09.2013

 ‘அம்மா’ உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்ண சீருடை தலை, கைக­ளுக்கு உறை அணி­யா­விட்டால் நட­வ­டிக்கை

சென்னை:மலிவு விலை உண­வ­கத்தில் பணி­பு­ரியும் மகளிர் சுய உத­விக்­குழு பெண்­க­ளுக்கு ஒரே வண்­ணத்தில் சீருடை வழங்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

சென்­னையில் உள்ள மலிவு விலை உண­வ­கங்கள் குறித்து தி.நகர்., சர் பிட்டி தியா­க­ராயர் அரங்கில் நேற்று மாலை மேயர் சைதை துரை­சாமி தலை­மையில் ஆலோ­சனை கூட்டம் நடந்­தது. அதில், மேயர் சைதை துரை­சாமி கூறி­ய­தா­வது:

உண­வ­கங்­களில் சுகா­தாரம் மிக முக்­கியம்.

தலை, கைக­ளுக்கு கவசம் அணி­யாமல் பணி­பு­ரிந்தால் நட­வ­டிக்கை கடு­மை­யாக இருக்கும்.

உண­வ­கங்­களை மேம்­ப­டுத்த, ஊழி­யர்கள் கேட்கும் வச­தி­களை மண்­டல அதி­கா­ரிகள் செய்து தர வேண்டும். தவ­றினால் நிர்­வாக நட­வ­டிக்­கைக்கு ஆளாக வேண்­டி­ இ­ருக்கும்.

உண­வக ஊழி­யர்­க­ளுக்கு ஒரே வண்­ணத்தில் சீருடை விரைவில் வழங்­கப்­படும்.

எலி தொல்லை இல்­லாமல் பார்த்து கொள்ள வேண்டும். உண­வகம் அருகில் தினமும் ‘பிளீச்சிங்’ பொடி துாவ வேண்டும்.

இவ்­வாறு பல்­வேறு ஆலோ­ச­னை­களை மேயர் வழங்­கினார்.

 


Page 106 of 506