Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கொசு உற்பத்திக்கு காரணமான இ.எஸ்.ஐ. பணி நிறுத்தம்

Print PDF

தினபூமி                20.09.2013

கொசு உற்பத்திக்கு காரணமான இ.எஸ்.ஐ. பணி நிறுத்தம்

http://www.thinaboomi.com/sites/default/files/Chennai_corporation(C).jpg

சென்னை, செப்.20 - கொசு உற்பத்திக்கும் காரணமான இ.எஸ்.ஐ கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அயனாவரம் இ.எஸ்.ஐ. வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் பல மாடி கட்டிட பணி காரணமாக அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீர் மூலம் நிறைய கொசு புழு உற்பத்தியாவது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு பணி புரியும் ஊழியர்கள், ஆஸ்பத்திரி நோயாளிகள், பக்கத்து குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் காண்டி ராக்டருக்கு எச்சரிக்சை விடுத்து நோட்டீஸ் அனுப்பினார்கள். 5 முறை எச்சரித்தும் அந்நிறுவனம் கண்டு கொள்ளவில்லை.

இதனால் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லுரி கட்டிட பணி நடக்கும் இடத்துக்கு மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது தேங்கி கிடந்த தண்ணீரில் கொசு அதிகமாக இருந்ததால் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு பல முறை எச்சரித்தும் சுகாதாரம் பராமரிக்கப்படாததால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி இ.எஸ்.ஐ. பல மாடி கட்டிட பணிகளை நிறுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற் கொண்டு கட்டிட காண்டிராக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வித்தது. அங்கு கொசுவை கட்டுப்படுத்திய பிறகுதான் கட்டிட பணிகள் திரும்பவும் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

‘மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை’ மன்ற கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

Print PDF

தினத்தந்தி             20.09.2013 

‘மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை’ மன்ற கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

 

 

 

 

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

அவசர கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா கூடத்தில் நேற்று மதியம் நடந்தது.கூட்டத்துக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம் வருமாறு:–

மேயர் செ.ம.வேலுச்சாமி:– கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு 17 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கொட்டப்படும் கட்டிட இடிபாடுகளை மறு சுழற்சி முறையில் கட்டுமான உபயோக பொருட்களாக மாற்ற தனியார் நிறுவனத்துடன் பேசி வருகிறோம்.அந்த நிறுவனத்துக்கு கழிவு நீர் பண்ணை இடத்தில் இடம் கொடுக்க மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.மாநகராட்சி ஏற்கனவே குறிப்பிட்ட 17 இடங்களை தவிர மற்ற இடங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமர்வு படியை உயர்த்த வேண்டும்

ஆணையாளர் லதா:–பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மாநகராட்சியின் 6 நகர் நல மையங்களில் செய்யப்படுகின்றன.இதற்கான மருந்துகளை தற்காலிகமாக மாநகராட்சி நிதியிலிருந்து வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியுள்ளது.அதன் பின்னர் அரசு நிதி ஒதுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ராஜேந்திரன்(நியமன குழு உறுப்பினர்):–கவுண்டம்பாளையம்–வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும் பகுதிகளுக்கு பில்லூர் 2–வது குடிநீர் திட்டத்திலிருந்து கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கூடுதல் தண்ணீரை எடுக்கும் பணி பவானி அருகே உள்ள மருதூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொண்டால் கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யலாம்.

செந்தில்குமார்(நகரமைப்பு குழு தலைவர்):–கவுன்சிலர்களின் அமர்வு படியை உயர்த்த வேண்டும்.வளர்ச்சித்திட்டங்களில் மற்ற மாநகராட்சிகளுக்கு நமது மாநகராட்சி முன்னோடியாக இருப்பதை போன்று அமர்வுபடி வழங்குவதிலும் நாம் முன்னோடியாக விளங்க வேண்டும்.

மயானம் அமைக்க அனுமதி

ராமமூர்த்தி:–வார்டுக்கு ஒரு நூலகம் என்ற திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேயர் செம.வேலுச்சாமி:–தற்போது 19 இடங்களில் உள்ள பழைய கட்டிடங்களில் நூலகம் அடுத்த மாதத்துக்குள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.அதை தொடர்ந்து மற்ற வார்டுகளிலும் நூலகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும்.சரவணம்பட்டி அம்மா உணவகத்துக்கு தேவையான கியாஸ் அழுகிய காய்கறிகளிலிருந்து தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல சொக்கம்புதூரில் அழுகிய காய்கறிகளிலிருந்து கியாஸ் தயாரித்து அதன் மூலம் செயல்படும் மயானம் அமைக்க ரூ. 95 லட்சம் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொகையை அரசிடமிருந்து பெற கடிதம் அனுப்ப மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கணபதி ராஜ்குமார்(மண்டல தலைவர்):–மாநகராட்சிக்கு சொந்தமான பொது பயன்பாட்டு இடத்தை (ரிசர்வ் சைட்) பலர் ஆக்கிரமித்து விட்டு அதை மீட்க செல்லும்போது தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

மேயர் செ.ம.வேலுச்சாமி:–கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 500 பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டு அதற்கான இடத்தை தேடும்போது தான் ரிசர்வ் சைட்டுகள் பற்றி வெளியே தெரிகிறது.ஏற்கனவே உள்ள 60 வார்டுகளில் பொது பயன்பாட்டு இடங்களை மீட்பதில் சிரமம் இல்லை.ஆனால் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் பொதுபயன்பாட்டு (ரிசர்வ்) இடங்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது.இதற்கு காரணம் ரிசர்வ் இடங்கள் பற்றி சரியான ஆவணங்கள் இல்லாதது தான்.எனவே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்பதிலும் அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அழுகிய காய்கறிகளை கொண்டு தயாரிக்கும் சமுதாய கியாஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் அது செயல்படுத்தப்பட்ட பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

இதைதொடர்ந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கூடுதலாக சேகரமாகும் 500 டன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் அமைக்க பெங்களூரை சேர்ந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது என்பன உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மாநகராட்சி "ரிசர்வ் சைட்' கணக்கெடுப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தீவிரம்

Print PDF

தினமலர்           19.09.2013

மாநகராட்சி "ரிசர்வ் சைட்' கணக்கெடுப்பு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தீவிரம்

கோவை:மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை சர்வே செய்து கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான லே-அவுட்கள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், அரசியல் தலையீடுகளால், ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாக உள்ளது. ராமநாதபுரம் 80 அடி ரோட்டில், பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமித்திருந்த தனபால் என்பவர், மேயர் மீது புகார் தெரிவித்தார். இதையடுத்து, கோர்ட் தீர்ப்பு வந்ததும், ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி பொது நிலங்கள் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. நகரமைப்பு அலுவலர் வரதராஜன் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சர்வேயர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டிலும் ஆக்கிரமிப்பு நிலங்களை சர்வே செய்து பட்டியலிட்டு வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி இடம் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இருந்தாலும், இடங்களை மீட்பதில் சிக்கல் உள்ளது. மாவட்ட கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுகளில் பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை காலி செய்து, இடத்தை மீட்க முடிவதில்லை.

வழக்கில் இருப்பவை, வழக்கு இல்லாதவை, காலி இடம் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டடம் கட்டியிருப்பது பற்றி சர்வே நடக்கிறது. ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டடம் கட்டியிருந்தால், அந்த இடத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மத்திய மண்டலத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோடு, அலமு நகர் ரிசர்வ் சைட் மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ஜி.ஆர்.ஜி., நகர், கேத்தாரி லே-அவுட் ரிசர்வ் சைட் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடவள்ளியில், 11 ரிசர்வ் சைட்களை ஆய்வு செய்ததில், ஆறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த இடங்களை உடனடியாக மீட்க ஆவணங்கள் தயார் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வார்டிலும் ரிசர்வ் சைட் சர்வே செய்து கணக்கெடுக்கப்படுகிறது. மத்திய மண்டலத்தில் புதிதாக லே-அவுட்கள் அமைக்கவில்லை. அதனால், மற்ற மண்டலத்திலுள்ள 80 வார்டுகளில் சர்வே எடுக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மூன்று மாதங்களில் இப்பணி முடிந்ததும், ஆக்கிரமிப்பு நிலங்கள் அதிரடியாக அகற்றப்படும். இவ்வாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 107 of 506