Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் குட்டை தூர்வாரும் பணி உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Print PDF

தினத்தந்தி           19.09.2013

காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் குட்டை தூர்வாரும் பணி உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

 
 
 
 
 
 
 
 
கோபிசெட்டிபாளையம் அருகே காசிபாளையம் பேரூராட்சியில் மழைநீரை சேரிக்கும் வகையில் காராப்பாடி ரோட்டில் உள்ள ஒரு குட்டையை தூர்வாருவதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம் குட்டையை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கலைவாணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, குட்டைக்கு தண்ணீர் வரும் பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் கலைவாணன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் குமார், செயல் அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

நீர் மாசுபாடு தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் அறிவுரை

Print PDF

தினகரன்                11.09.2013

நீர் மாசுபாடு தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் நகராட்சிக்குட்பட்ட மேல்நிலை தொட்டிகளில் சேமித்து, குடியிருப்பு பகுதிகளுக்கு திறக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக நகரில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால், சில இடங்களில் தண்ணீர் மாசுபடுவதாக புகார் எழுந்ததுள்ளது.

 இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் நகரில் உள்ள சில குடியிருப்புகளில் தரைமட்ட தொட்டியில் தண்ணீரை சேமித்து பல நாட்களுக்கு பிறகு உபயோகப்படுத்துவதால், தண்ணீர் மாசுப்படித்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் வினியோக திட்டத்திற்கு, அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, தலைமை நீரேற்று நிலையத்தில் படிகாரம் போட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிக்காக குளோரினேசன் செய்யப்படுகிறது. அவை, நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில்  சேமித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது, நகரில் உள்ள மேல்நிலை தொட்டிகள் அனைத்தும், 15 நாட்களுக்கு ஒருமுறை தூய்மையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரில் சில வீடுகளில் தரைமட்ட தொட்டிகளில் நேரடியாக குடிநீர் விட்டு சேமிப்பதால், அந்த தண்ணீர் மாசு எற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே,

பொதுமக்கள் நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை தரைமட்டத்திற்கு மேல் பிடிக்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். தரைமட்ட நீர்தேக்க தொட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‘ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

 

ரூ 469 கோடியில் நடக்கும் தனி குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை உலக வங்கி குழு ஆய்வு

Print PDF

தினகரன்              05.09.2013

ரூ 469 கோடியில் நடக்கும் தனி குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை உலக வங்கி குழு ஆய்வு

சேலம், : சேலத்தில் ரூ 469 கோடி மதிப்பில் நடந்து வரும் தனி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் ஞி320 கோடி மதிப்பில் தனிக்குடிநீர் திட்ட பணியும், ரூ 149 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணியும் உலக வங்கி கடன் வசதியுடன் நடந்து வருகிறது. இந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது? என உலக வங்கி குழுவினர் சேலம் மாநகர பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

டெல்லியில் இருந்து வந்த இக்குழுவில் மோகன், ராகவா, ரகுகேசவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுடன் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதி நிறுவன பிரதிநிதி ராஜேந்திரன், இன்ஜினியர் வைத்தீஸ்வரன், ஜஸ்டின், கார்த்திக் ஆகியோரும் வந்தனர். இவர்கள், சேலம் மாநகர பகுதியில் நடந்து வரும் தனிக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி ஆகியவற்றையும், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

பின்னர் தனிக்குடிநீர் திட்டத்திற்காக ஓமலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்க வேண்டியிருக்கும் பகுதியை ஆய்வு செய்தனர். அதன்பின் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், பணி நிலைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, மேயர் சவுண்டப்பன், கமிஷனர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன், வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 


Page 109 of 506