Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி சார்பில் நிலுவை வரி வசூலிக்க சிறப்பு முகாம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க வேண்டுகோள்

Print PDF

தினகரன்              05.09.2013

மாநகராட்சி சார்பில் நிலுவை வரி வசூலிக்க சிறப்பு முகாம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க வேண்டுகோள்

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் நிலு வை வரி செலுத்த வரும் 30ம் தேதி வரை தீவிர வரி வசூல் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சிக்கு செலு த்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சி சட்டம் 126 பிரிவின்படி ஒவ்வொரு அரையாண்டும் அந்த அரையாண்டுக்கான சொத்து வரியை அரை யாண்டு துவங்கி 15 நாட்களுக்குள் செலுத்த வேண் டும். தண்ணீர் கட்டணங் களை 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.

வரும் 30ம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில், மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் சேவை கட்டணம் மற்றும் தொழில்வரி போன்ற அனைத்து நிலுவையில் உள்ள முதல் மற்றும் 2ம் அரையாண்டு வரையி லான வரியை செலுத்த வேண்டும். பொன்மலை, கோ.அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது அரியமங்கலம், சுப்ரமணியபுரம், மேலகல்கண்டார் கோட்டை, கே.கே.நகர், கள்ளத்தெரு, நந்திகோவில் தெரு, தேவர்ஹால், திருவெறும்பூர் வார்டு அலுவலகம் ஆகிய இடங்களி லோ வரியை செலுத்தலாம்.

மேலும் தில்லைநகர், ஸ்ரீரங்கத்தில் உள்ள சிட்டி யூனியன், திருவெறும்பூரில் உள்ள எச்டிஎப்சி வங்கிக ளில் உள்ள வசூல் மையங்களில் செலுத்தலாம்.

இந்த வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதி யம் 2 மணி வரை செயல் படும்.

பொது மக்கள் வரியை உரிய காலத்தில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ரூ.247 கோடியில் குடிநீர் திட்ட பணி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன்              05.09.2013

ரூ.247 கோடியில் குடிநீர் திட்ட பணி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

மதுரை:  ரூ.247 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணியை செயல்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: மண்டல தலைவர் (மேற்கு) ராஜபாண்டி: பென்மேனி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. சரிசெய்ய பணியாளர்கள் இல்லை. செல்லூர் கண் மாயை தூர்வார வேண்டும் என்றார்.

மேயர்: குடிதண்ணீர் பிரச்னையை தீர்க்க ரூ.247 கோடியில் பழைய 72 வார்டுகளில் புதிய குழாய் பதிக்கப்பட உள்ளது. மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படும்.

மண்டல தலைவர் சாலை முத்து: எனது மண்டலத்தில் ரூ.1.50 கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்டது. அந்த கோப்புகளில் நானோ, அதிகாரிகளோ கையெழுத்து போடவில்லை என முதல்வரை பற்றி புகழ்ந்து பேசி கொண்டே இருந்தார்.

இவரின் பேச்சுக்கு அதிமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் மண்டல தலைவர்கள் பேசுவதில் நேரம் முடிந்து விடுகிறது. நாங்கள் பேச முடியவில்லை. எனவே உட்காரும்படி கோரினர். இதனால் சாலை முத்துக் கும், அதிமுக கவுன்சிலர் முத்துக்கருப்பனுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அதிமுக கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், மண்டலத்திலும் பேச முடியவில்லை. இங்கேயும் பேச முடியவில்லை.

உறுப்பினர்கள் பேசும் போது மண்டல தலைவர்கள் கேட்டு இதற்கு பதில் கூற வேண்டும். முதலில் மண்டல தலைவர்களை பேச அனுமதிக்கக்கூடாது என்றனர். இதற்கு மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது.  ரூ.247 கோடியில் புதிதாக குடிநீர் பைப் பதித்தல் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

குடிநீர் இணைப்பு பணிகள் துவக்கம்! பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம்

Print PDF

தினமலர்               05.09.2013

குடிநீர் இணைப்பு பணிகள் துவக்கம்! பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம்

கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, பிளம்பர்கள் 44 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு மழை பெய்யாமல் சிறுவாணி அணையில் வறட்சி ஏற்பட்டு, தினமும் 25 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதால், சிறுவாணி குடிநீர் செல்லும் பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், புதிதாக குடிநீர் இணைப்பு கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, சிறுவாணி திட்டத்தில் தினமும் 85 மில்லியன் லிட்டரும், பில்லூர் -1 திட்டத்தில் 65 மில்லியன் லிட்டரும், பில்லூர் -2 திட்டத்தில் 40 மில்லியன் லிட்டரும், ஆழியாறு திட்டத்தில் 7.8 மில்லியன் லிட்டரும் குடிநீர் கிடைக்கிறது.

பழைய மாநகராட்சி பகுதிகளில் தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதால்,புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என, மேயர் அறிவித்தார். மேலும், குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ள பிளம்பர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்தது. மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்துள்ள பிளம்பர்கள், புதிதாக விண்ணப்பித்த பிளம்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. மாநகராட்சியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், 44 பிளம்பர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குடிநீர் இணைப்பு கேட்டுள்ள, 3400 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. பழைய மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி துவங்கியுள்ளது. உரிமம் பெற்றுள்ள பிளம்பர்கள் மூலம் குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டாலும், பிளம்பர்கள் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தால் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யலாம்' என்றனர்.

 


Page 110 of 506