Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வெங்கம்பூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி             05.09.2013

வெங்கம்பூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு

கொடுமுடி அருகே வெங்கம்பூர் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கலைச்செல்வன் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

இந்த பேரூராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொது சுகாதார வளாகங்களை  பராமரிக்கும் முறை, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறைகள், செயல்படுத்தும் விதங்களை அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வெங்கம்பூர் பேரூராட்சித் தலைவர் சூர்யா சிவகுமார், செயல் அலுவலர் சின்னதுரை மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

 

மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் மேயர் ஆய்வு

Print PDF

தினமணி             05.09.2013

மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் மேயர் ஆய்வு

சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

 ஆய்வின் போது தேங்கியிருந்த நீரை அகற்றுமாறும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

 காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் பலத்த மழை பெய்தது. வானிலை மையத் தகவலின் படி நகரில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

 இதன் காரணமாக பிரதான சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மேலும் நகரின் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கியிருந்தது.

 மழை நீர் வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக புதன்கிழமையும் பல இடங்களி்ல் மழை நீர் வடியாமல் தேங்கியிருந்தது. இதில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

 இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:-

 பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வரதராஜூலு தெரு சந்திப்பில் மழைநீர் தேங்கியிருந்தது. 

 மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக அப்பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் பழுதடைந்திருந்தது. இதனை சரிசெய்து, தேங்கியிருந்த மழை நீரை அகற்ற உத்தரவிடப்பட்டது.

 மேலும், இப்பகுதியில் உள்ள சில உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருந்தது ஆய்வின் போது தெரிய வந்தது.  அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

 இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

30-க்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமணி             04.09.2013

30-க்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டின் (2013-14) முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அந்த தேதிக்குள் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:-

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், அரசு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், தமிழக அரசுக்கு விற்பனை வரி செலுத்துபவர்கள் ஆகியோர் நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி ஏதேனும் நிலுவையில் இருப்பின், அந்தத் தொகையும் சேர்த்து செலுத்த வேண்டும். வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தொழில் வரியை செலுத்தத் தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

 


Page 112 of 506