Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருச்செந்தூரில் ரூ.2¼ கோடி செலவில் புதிய சாலைகள் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி            31.08.2013

திருச்செந்தூரில் ரூ.2¼ கோடி செலவில் புதிய சாலைகள் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/TutRoad.jpg

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கொ.ராஜையா, துணைத் தலைவர் தொ.ராஜநளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருச்செந்தூர் சன்னதி தெருவில் ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு சாலை, சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் தொடங்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் வரை ரூ.27 லட்சம் செலவில் சிமெண்டு சாலை, சபாபதிபுரம் தெருவில் ரூ.36 லட்சம் செலவில் தார் சாலை, சபாபதிபுரம் தெருவில் சாலையின் இரு புறமும் ரூ.37 லட்சம் செலவில் சிமெண்டு கான்கிரீட் கற்கள் பதித்தல்,

சன்னதி தெரு முதல் தாலுகா அலுவலகம் வரை ரூ.45 லட்சம் செலவில் சிமெண்டு கான்கிரீட் கற்கள் பதித்தல், தாலுகா போலீஸ் நிலையம் முன்புறம் மற்றும் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரூ.41 லட்சம் செலவில் சிமெண்டு கான்கிரீட் கற்கள் அமைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 36 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

5 பஞ்சாயத்துகளுக்கு ரூ.282¼ கோடி மதிப்பில்ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி            31.08.2013

5 பஞ்சாயத்துகளுக்கு ரூ.282¼ கோடி மதிப்பில்ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளுக்கு ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலா புஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர், ஆணையாளர் மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கவுன்சிலர் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி ஒருங்கிணைந்த பஸ்நிலையம் எப்போது செயல்படுத்தப்படும், அதன் நிலை என்ன என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் சசிகலா புஷ்பா, ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்தது. மாவட்ட நிர்வாகம் ஒரு இடத்தை தேர்வு செய்தது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் தனியார் நிறுவனம் மூலம் வாய்ப்பான இடத்தை தேர்வு செய்ய டென்டர் விடப்பட உள்ளது, என்று கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள 5 பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் கடன் மற்றும் மானியங்களின்படி இந்த திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 25 சதவீதம் கடன் தொகையான ரூ.70 கோடியே 61 லட்சத்துக்கான நிபந்தனைகள் அங்கீகரிப்பது, துறைமுக நிதியில் இருந்து பூங்காக்களை சீரமைப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி              30.08.2013 

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.

இதில், ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட நாள்களுக்குள் பணிகளை முடிக்காத 2 ஒப்பந்ததாரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது, சென்னையில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய தரக்கட்டுப்பாட்டு கூடங்கள் அமைப்பது, தொழில் உரிமம் வசூலிக்க புதிய வழிமுறையைக் கடைப்பிடிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள்: கோடம்பாக்கம் மண்டலம், ரங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் மலிவு விலை காய்கறிக் கடைகள் திறக்கவும், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள வணிக வளாக கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய வெப்பத்தார் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேறியது.

சிறப்புத் தீர்மானங்கள்: ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது, நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியது போன்ற நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 


Page 115 of 506