Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"குளோரினேஷன்' கருவி மூலம் குடிநீர் லாரிகளில் பரிசோதனை பாதுகாப்பான நீரை வழங்க அறிவுரை

Print PDF
தினமலர்               23.08.2013

"குளோரினேஷன்' கருவி மூலம் குடிநீர் லாரிகளில் பரிசோதனை பாதுகாப்பான நீரை வழங்க அறிவுரை


ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில், தனியார் குடிநீர் லாரிகளில் வினியோகிக்கப்படும், தண்ணீர், "குளோரினேசன்' செய்யப்பட்டுள்ளதா? என்பதை, உரிய கருவி மூலம் சோதித்த பின்னரே வழங்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

மழை காலம் துவங்கியபின் கொசு மற்றும் தண்ணீரால் பல நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சுகாதாரமற்ற குடிநீரால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும். இதை தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில் தனியார் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளில் "குளோரினேசன் டெஸ்டர்' மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். மேலும் வீடுகளில் கிணறு, தொட்டிகளில் தேக்கப்படும் தண்ணீரும் பாதுகாப்பாக உள்ளதா? என, பரிசோதித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சுகாதார அலுவலர் சந்திரன் கூறியதாவது: குடிநீர் லாரிகளில் சாதாரணமாக "0.2 பார்ட்ஸ் பெர்' மி.லி., அளவில் குளோரினேசன் செய்திருக்க வேண்டும். சில நேரங்களில் அளவு தெரியாமல் 2.0 அளவில் கலந்த தண்ணீரை குடிக்கும்போது, உதடு வெந்துவிடும். எனவே, எந்தளவு "குளோரினேசன்' செய்துள்ளனர் என்பதை, அவர்கள் கொண்டு வரும் தண்ணீரை, "குளோரினேசன் டெஸ்டர்' கருவி மூலம் பரிசோதித்து, எத்தனை சதவீதம் உள்ளது என்பதை அறிந்து கொள்வோம். அதிகமாக இருந்தாலும் அல்லது, "குளோரினேசன்' இல்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
 

ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

Print PDF

தினமணி             23.08.2013

ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி, ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை புதன்கிழமை  அதிகாரிகள் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக நரசிம்ம வர்மநகரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து 20 குடிசைகள் வரை அமைத்திருந்தனர்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் வீரபொம்மு, காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர், மறைமலைநகர் காவல் நிலையத்துக்கும், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய்த்துறைக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து உதவி ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின்பேரில் கோயில் செயல் அலுவலர் வீரபொம்மு, கிராம வருவாய் அலுவலர் மோகன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும்.

  கோயில் செயல் அலுவலர் வீரபொம்மு கூறுகையில், "இதேபோல் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்' என்றார்.

Last Updated on Friday, 23 August 2013 07:25
 

வேலூர் ஓட்டேரி பகுதியில் மேயர், ஆணையாளர் அதிரடி ஆய்வு

Print PDF

தினத்தந்தி              23.08.2013

வேலூர் ஓட்டேரி பகுதியில் மேயர், ஆணையாளர் அதிரடி ஆய்வு 

 

 

 

 

 

வேலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு.

மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தருமலிங்கம், ஆணையாளர் ஜானகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஓட்டேரி ஏரியில் ஆக்கிரமிப்பு பகுதிகளையும், அதுபோல் ஓட்டேரி கோமுட்டி குளத்தையும் அந்த குளக்கரையில் வீடு கட்டியவர்களின் வீட்டு ஆவணங்களையும் ஆய்வு செய்து சரி பார்த்தனர்.

இதுபற்றி மேயரிடம் நிருபர்கள் கேட்டபோது ‘தொடர்ந்து வேலூர் முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை கையகப்படுத்த தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தெரிவித்தார்.

 


Page 120 of 506