Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறியவர்களிடம் ரூ.43 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன்            21.08.2013

விதிமீறியவர்களிடம் ரூ.43 ஆயிரம் அபராதம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 7, 27, 53 மற்றும் 78 ஆகிய வார்டு களில் தீவிர துப்புரவு பணி நேற்று நடந்தது. இதனை பார்வையிட்ட வந்த கமிஷனர் நந்தகோ பால் கூறுகையில், ஒவ் வொரு மண்டலத்திலும் ஒரு வார்டு வீதம் நான்கு வார்டுகளில் தீவிர துப்புரவு பணி நடந்தது. இதில் 22 டன் குப்பை அகற்றப்பட்டது. கொசு மருந்து தெளிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. குப்பைகளை தெருவில் கொட்டியதற்காக 6 கடைகளுக்கு ரூ.3700 அபராதம் விதிக்கப்பட்டது. சாலையோரம் திரிந்த 18 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதற்காக மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.43 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,’’என்றார்.

 

கால்வாய்களில் குப்பைகள் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Print PDF

தினமலர்              21.08.2013

கால்வாய்களில் குப்பைகள் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி:கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சிக்குள் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் ஆங்காங்கே பொதுமக்களும், வணிகர்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் வெள்ளக் காலங்களில் மழை நீர் செல்லும் வழியை அடைத்து கொண்டு வெள்ள சேதம் ஏற்படவும், குப்பைகள் மழை நீரில் நனைவதால் துர் நாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான சுகாதார கேடுகள் ஏற்பட காரணமாகிறது.

எனவே, இதுபோன்ற தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் குப்பைகள் கொட்டுவதை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தவிர்க்க வேண்டும். குப்பைகளை அருகில் உள்ள தொட்டிகளில் கொட்ட வேண்டும். இதனை மீறினால் பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

கடலூர் பஸ் நிலைய கடைகளுக்கு சீல் வைப்பு : ரூ.1.25 கோடி வாடகை பாக்கியால் நகராட்சி சீல் வைப்பு நடவடிக்கை

Print PDF

தினமலர்                20.08.2013

கடலூர் பஸ் நிலைய கடைகளுக்கு சீல் வைப்பு : ரூ.1.25 கோடி வாடகை பாக்கியால் நகராட்சி சீல் வைப்பு நடவடிக்கை

கடலூர்:கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 23 கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டதால் பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் பஸ் நிலையத்தில் 80 கடைகளுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 74 கடைகள் வாடகை பாக்கி செலுத்துவதில்லை. இதில், அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மேலும், குறைந்தபட்சமாக 3 மாதங்களாக வாடகை செலுத்தாதவர்களால் 1.25 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.பெரும் தொகை வாடகை பாக்கியுள்ளதால், நகராட்சிக்கு வருவாய் இல்லாததால் துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.வாடகை பிரச்னைத் தொடர்பாக கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதில் வாடகை செலுத்தாமல் உள்ளவர்கள் குறிப்பிட்ட தொகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இருந்தும் பெரும்பான்மையான கடைகள் வாடகை பாக்கியை செலுத்தாமல் காலம் கடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி நிர்வாகம், வாடகை பணம் செலுத்தா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் கொடுத்தனர்.இறுதியாக வாடகை பணம் செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் வாடகை பாக்கி கட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.அதன்படி நேற்று நகராட்சி கமிஷனர் காளிமுத்து, நகர் நல அலுவலர் குமரகுருபரன், நகரமைப்பு அலுவலர் முரளி, நகராட்சி மேலாளர் முருகேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலர்கள், ஊழியர்களும், 25க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களும் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைக்க அதிரடியாக களத்தில் இறங்கினர்.

சீல் வைப்பு நடவடிக்கையில் இறங்கிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் உள்பட 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அதிகபட்சமாக 5வது எண் கடையின் உரிமையாளர் சந்திரா என்பவர் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த கடை, குறைந்த பட்சம் 55 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் வரை மொத்தம் 23 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.இந்த அதிரடி சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அதிரடியாக அதிகாரிகள்ஆடிப்போன வியாபாரிகள்கடலூர் நகராட்சி நேற்று வாடகை வசூல் செய்யச் சென்ற போது, வழக்கம் போல் மிரட்டல்தான் என பஸ் நிலைய வியாபாரிகள் அசால்டாக இருந்தனர். ஆனால், அதிகாரிகள் சீல் வைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதும், ஆடிப்போய் விட்டனர்.

இதில் சிலர் உடனடியாக பணத்தை செலுத்துகிறேன் எனக் கூறினர். அவர்களிடம், அலுவலகத்திற்கு சென்று பாக்கியை செலுத்துங்கள். அதன் பிறகு கடை திறந்து விடப்படும் என தெரிவித்து விட்டனர். நகராட்சி நிர்வாகம் வாடகை கடைகளுக்கு பூட்டி சீல்வைத்தாலும், கொஞ்சம் கூட அசராமல் ஒரு சிலர் கடைக்கு முன் மேஜைகளைப் போட்டு நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தை கவனித்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

 


Page 123 of 506