Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி மாநகராட்சியில் கணக்கெடுப்பு பணி

Print PDF

தினமலர்                19.08.2013

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி மாநகராட்சியில் கணக்கெடுப்பு பணி

சேலம்: சேலம் மாநகராட்சியில், வீடுகளில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா, என்று கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு தொட்டி திட்டத்தை, பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில், புதிய குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, சொத்துவரி விதிப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, குறித்த புகைப்படம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மாநகராட்சியின், 60 வார்டுகளிலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி தொடர்பான கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் மூலம், வீடு வீடாக சென்று, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள விவரத்தை கேட்டறிந்தும், நேரில் பார்வையிட்டும், சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் அலட்சியம் காட்டும் பகுதிகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்வது மற்றும் அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக துவங்குவதற்õன நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி          19.08.2013

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடத்தில் குப்பையை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குப்பைத் தொட்டிகள்

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருவோரக் கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பை வண்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.

அபராதம்

அப்படி இல்லாமல் பொது இடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதை மீறி தெருவில் குப்பை கொட்டினால், முதல் தடவை ரூ.500–ம், இரண்டாம் தடவை ரூ.1000மும் என அபராதம் விதிக்கப்படும்.

எனவே தெருவோரக் கடைக்காரர்கள், வியாபார நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் அன்றாடம் சேரும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் சேகரித்து அந்தந்த தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் கொட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

Print PDF
தினமலர்               16.08.2013

வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு


திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் கடந்தாண்டு வசூலாக வேண்டிய வரி 8.12 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. வரி நிலுவையை உடனடியாக செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் செல்வராஜ் எச்சரித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில்3 லட்சத்து 69 ஆயிரத்து 980 வரி விதிப்புகள் உள்ளன. வரியினங்கள் மூலம் 55.48 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. கடந்த நிதியாண்டு (2012-13) கணக்கில், 8.12 கோடி ரூபாய் நிலுவையுள்ளது.

சொத்து வரியாக 35.35 கோடி வசூலிக்க வேண்டும்; 31.38 கோடி மட்டும் வசூலானது. 3.98 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

குடிநீர் கட்டணத்தில், 13.86 கோடி வசூலிக்க வேண்டும்; 10.44 கோடி வசூலானது. மீதம் 3.42 கோடி நிலுவையில் உள்ளது.

தொழில் வரியாக 1.77 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்; 1.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் 24.55 லட்சம் நிலுவை உள்ளது. குத்தகை கட்டணம் மூலம் 4.50 கோடி வசூலாக வேண்டும்; ஆனால், 4.02 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; மீதம் 47.81 லட்சம் ரூபாய் நிலுவையாக உள்ளது.

மொத்தமுள்ள வரியினங்கள் மூலம், 55.49 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியதில், 47.37 கோடியே வசூலிக்கப்பட்டது; 8.12 கோடி நிலுவையாக உள்ளது. நடப்பு (2013-14) நிதியாண்டுக்கான வரி வசூல் துவங்கப்பட்டுள்ளதால், நிலுவை வரியினங்கள் வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், ""கடந்தாண்டு வரி நிலுவையை வசூலிக்கும் விதமாக, வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, 90 சதவீதத்துக்கும் அதிகமாக வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
 


Page 125 of 506