Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

முகப்பேரில் வீடு கட்ட அனுமதி வாங்கிவிட்டு வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தியதால் கட்டிடத்திற்கு சீல்வைப்பு சி.எம்.டி.ஏ. அதிரடி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி              16.08.2013

முகப்பேரில் வீடு கட்ட அனுமதி வாங்கிவிட்டு வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தியதால் கட்டிடத்திற்கு சீல்வைப்பு சி.எம்.டி.ஏ. அதிரடி நடவடிக்கை

 

 

 

 

 

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.)  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை பெருநகர் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டறிந்து சி.எம்.டி.ஏ., நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை முகப்பேர் மேற்கு, பாரதி சாலையில், உயர்வகுப்பு பிரிவினருக்கான மனை 295–ல் 2 வீடுகளுடன் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கட்டுவதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி வாங்கினார்.

அதன்படி கட்டிடம் கட்டிவிட்டு, அதனை வணிக நோக்கத்தில் பயன்படுத்தினார். மேலும், கட்டிடமும் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்பிறகும் அவர் கட்டிடத்தில் உரிய மாற்றங்கள் செய்யவில்லை. அதனால் அந்த கட்டிடம் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

"மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை'

Print PDF

தினமணி           14.08.2013

"மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை'

குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சினால், இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செந்தாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.மாலினி ரமேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

செந்தாரப்பட்டியில் குடிநீர் இணைப்புகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின் மோட்டார்களை பொருத்தி பலர் குடிநீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என்றார் மாலினி ரமேஷ்.

 

15 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி           14.08.2013

15 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட, 15 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட பணியாளர்கள் கல்லூரி சாலை, அவிநாசி சாலையில் உள்ள மளிகைக் கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் என 35 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள்,  ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் என 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்வதோடு, அதை விற்பனை செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 


Page 126 of 506