Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருப்பூரில் மளிகை, பேக்கரி கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினத்தந்தி              14.08.2013

திருப்பூரில் மளிகை, பேக்கரி கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


 
 
 
 
 
 
 
 
திருப்பூரில் மளிகைகடை மற்றும் பேக்கரி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்து 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பைகள்

40 மைக்ரானுக்கு குறை வான பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ் டிக் குவளை போன்றவற்றை விற்பனை செய்யவும், பயன் படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் திருப்பூரில் வியாபாரிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கடைகளில் இருந்து இந்த பைகளை வாங்கி வரும் பொதுமக்கள் அவற்றை முறைப்படி அழிக்காமல் சாக் கடைகளில் வீசி எறிகிறார்கள். இதனால் சாக்கடைகளை அடைத்து கொள்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கின் றன. இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதிரடி சோதனை

இந்த நிலையில் திருப்பூர் மாநகர் நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராம கிருஷ்ணன், முருகன் மற்றும் சுகாதாரபிரிவு அதிகாரிகள் நேற்று திருப்பூர் கல்லூரி சாலை, அவினாசி ரோடு ஆகிய பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் அதி ரடி சோதனை மேற்கொண் டனர். இதில் மளிகை கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் ஓட்டல்களில் 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள், தட் டுகள், கிண்ணங்கள் ஆகி யவை பயன்படுத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த கடைகளில் இருந்து மொத்தம் 15 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். மேலும், கடைகளில் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட் டால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப் படுவதுடன் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகர் நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார் தெரிவித்தார்.

 

ஆபத்­தான மரக்­கி­ளைகள் குறித்து தகவல் சொல்லுங்கள்

Print PDF
தினமலர்        13.08.2013

ஆபத்­தான மரக்­கி­ளைகள் குறித்து தகவல் சொல்லுங்கள்


சென்னை:சென்னை நகரில், பட்­டுப்­போன நிலையில், ஆபத்­தாக தொங்கிக் கொண்­டி­ருக்கும் மரக்­
கி­ளைகள் மற்றும் ஒளியை மறைக்கும் மரக்­கி­ளைகள் குறித்து, தகவல் தெரி­விக்­கலாம் என, மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி வெளி­யிட்­டுள்ள அறி­விப்பு:

சென்னை நகர, சாலை­க­ளிலும் உள்ள பட்­டுப்­போன மரங்கள், கிளைகள் விழும் நிலையில் உள்ள மரங்கள், தெரு­வி­ளக்கு வெளிச்­சத்தை மறைக்கும் மரக்­கி­ளை­க­ளை அகற்ற நட­வ­டிக்கை எடுத்து வருகிறோம்.

இப்­ப­டிப்­பட்ட மரங்­களைக் கண்டால், 1913 என்ற தொலை­பேசி எண்ணில், 24 மணி­ நே­ரமும் பொது­மக்கள் புகார் தெரி­விக்­கலாம்.சென்னை மேயரின் தொலை­பேசி, 2561 9300 கமி­ஷனர் அலு­வ­லக தொலை­பேசி, 2561 9200 ஆகி­ய­வற்­றிலும் புகார் தெரி­விக்­கலாம்.

மண்­டல அலு­வ­லக தொலை­பேசி எண் விவரம்:

மண்­டலம் அலு­வ­லகம் தொலை­பேசி எண்


1 திரு­வொற்­றியூர் 2599 3494 / 94451 90201
2 மணலி 2594 1079 / 94451 90202
3 மாத­வரம் 2553 0427 / 94451 90203
4 தண்­டை­யார்­பேட்டை 2595 1083 / 94451 90204
5 ராய­புரம் 2520 6655 / 94451 90205
6 திரு.வி.க., நகர் 2674 9990 / 94451 90206
7 அம்­பத்துார் 2625 3331 / 94451 90207
8 அண்­ணா­நகர் 2641 2646 / 94451 90208
9 தேனாம்­பேட்டை 2817 0738 / 94451 90209
10 கோடம்­பாக்கம் 2483 8968 / 94451 90210
11 வள­ச­ர­வாக்கம் 2486 7725 / 94451 90211
12 ஆலந்துார் 2234 2355 / 94451 90212
13 அடை­யாறு 2442 5961 / 94451 90213
14 பெருங்­குடி 2242 0600 / 94451 90214
15 சோழிங்­க­நல்லுார் 2450 0923 / 94451 90215
 

துரைப்­பாக்கம் ஆனந்தா நகரில் மழைநீர் கால்வாய் ஆய்வு பணிகள் முடிந்­த­தாக மாந­க­ராட்சி விளக்கம்

Print PDF
தினமலர்            13.08.2013

துரைப்­பாக்கம் ஆனந்தா நகரில் மழைநீர் கால்வாய் ஆய்வு பணிகள் முடிந்­த­தாக மாந­க­ராட்சி விளக்கம்


சென்னை:மாந­க­ராட்­சியால் நிய­மிக்­கப்­பட்ட தனியார் நிறு­வனம் கள ஆய்வு முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்­பித்­தது. விரைவில் திட்ட மதிப்­பீடு தயார் செய்து, துரைப்­பாக்கம் ஆனந்தா நகர், விநா­யகா நகரில் மழைநீர் கால்வாய் அமைக்­கப்­படும்,’ என, மாந­க­ராட்சி விளக்கம் அளித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யுடன் இணைக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டுகள் ஆகியும், துரைப்­பாக்கம் ஆனந்தா நகர், விநா­யகா நகரில் மழைநீர் கால்வாய், சாலை பணிகள் எதுவும் நடை­பெ­ற­வில்லை என, ‘தின­மலர்’ நாளி­தழில் நேற்று, விரி­வான செய்தி வெளி­யி­டப்­பட்டு இருந்­தது.

இதுகுறித்து, சென்னை மாந­க­ராட்சி அளித்­துள்ள விளக்கம்:

மழைநீர் கால்வாய் அமைக்க கோரி ஆனந்தா நகர், விநா­யகா நகர் நல­சங்­கங்கள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல், செப்­டம்பர், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் மேய­ரிடம் புகார் மனு கொடுக்­கப்­பட்­டது.

பரிந்துரை

இந்த புகார்கள் மீது நட­வ­டிக்கை கோரி, மழைநீர் வடி­கால்வாய் துறை மேற்­பார்வை பொறி­யா­ள­ருக்கு மேயர் பரிந்­துரை செய்­துள்ளார். குறிப்­பிட்ட நலச்­சங்­கங்கள் கொடுத்த மற்ற புகார்கள் மீதும் நட­வ­டிக்கை கோரி அந்­தந்த துறை­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், நட­வ­டிக்கை இல்­லாமல் இருந்தால், தெரி­விக்க கோரி மேயர் நேர­டி­யாக, அந்த நல­சங்­கங்­க­ளுக்கு கடிதம் எழு­தி­உள்ளார்.

கள ஆய்­வு


இந்த நகர்­களின் மழைநீர், பள்­ளிக்­க­ரணை சதுப்பு நில பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது பெரிய பணி என்­பதால், விரி­வான கள ஆய்­வுக்கு தனியார் நிறு­வ­னத்தை மாந­க­ராட்சி நிய­மித்­தது.

டெட்ரா டெக் என்ற அந்த நிறு­வனம் ஆய்வு பணி­களை முடித்து, கடந்த, 2ம் தேதி அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. இதை அடிப்­ப­டை­யாக கொண்டு, இனி, திட்ட மதிப்­பீடு தயார் செய்து விரைவில் பணிகள் துவங்­கப்­படும்.

ஆனந்தா நகரில், ஒன்­பது குறுக்கு சாலை­களும், விநா­யகா நகரில், ஏழு குறுக்கு சாலை­களும் உள்­ளன. இங்கு, 50.90 லட்சம் ரூபாய் மதிப்பில், கப்பி தள சாலைகள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

மதிப்பீடு

இதன் மீது, தார் சாலைகள் அமைக்க, 48.65 லட்சம் ரூபாய்க்கு மதிப்­பீடு தயார் செய்­யப்­பட்டு, வார்டு குழு ஒப்­புதல் இன்று (நேற்று) பெறப்­பட்­டது. இந்த நிதி­யாண்டில் பணிகள் மேற்­கொள்­ளப்­படும்.

ஆனந்தா நகர் பிர­தான சாலையை, 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்க மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ‘கிரீட் 3’ திட்­டத்தில் இது செய்­யப்­படும். இந்த நகர் அமைந்­துள்ள 193வது வார்டில் அடுத்த மாதம் கழி­வுநீர் மற்றும் குடிநீர் பணிகள் துவங்க இருப்­பதால், அந்த பணி முடிந்த பிறகே சாலை அமைக்கும் பணிகள் துவங்­கப்­படும். இவ்­வாறு மாந­க­ராட்சி விளக்கம் அளித்­துள்­ளது.
 


Page 127 of 506