Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருநின்றவூர் பேரூராட்சியில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி               12.08.2013

திருநின்றவூர் பேரூராட்சியில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு

 
திருநின்றவூர் பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு வந்த புகாரை அடுத்து திருநின்றவூர் பேரூராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
பேரூராட்சி பணிகள், பஸ்நிலையம் அமைக்கும் இடம், பொது கழிப்பிடம் அமைக்கும் இடம், ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன் 3–வது வார்டில் சாலை வசதிகள், பூங்கா, 10–வது வார்டில் அமைக்கப்படுள்ள ஆட்டுத்தொட்டி, 13– வது வார்டில் தனியாரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரச்சினைக்குரிய வீட்டு மனைகள், பெரியார் நகர் ஏரியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டிய இடம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.
 
அலுவலகத்தில் மகளிர் குழுவினரின் தையல் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டார். பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆய்வின் போது வேணுகோபால் எம்.பி., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் செல்வம், பூந்தமல்லி தாசில்தார் ராஜேந்திரன், திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கவுன்சிலர்ககள் சார்லஸ், சுபாஷினி, ஏ.சி. பாஸ்கர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 

கடைக்கு முன் குப்பை குவிந்தால் ரூ.500 நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்கும் பணி மும்­முரம்

Print PDF

தினமலர்                12.08.2013

கடைக்கு முன் குப்பை குவிந்தால் ரூ.500 நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்கும் பணி மும்­முரம்


சென்னை:கடைக்­கா­ரர்கள், சாலையில் குப்பை வீசு­வதை தவிர்க்க, அனைத்து கடை­க­ளிலும் குப்பை தொட்­டிகள் கட்­டாயம் என, மாந­க­ராட்சி அறி­வு­றுத்­தி­யு உள்­ளது. இதை மீறி குப்பை வீசு­ப­வர்­க­ளுக்கு, 500 ரூபாய், நிர்­வாக கட்­டணம் வசூ­லிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

உத்தரவு

சென்­னையில், கடைகள் அமைந்­துள்ள சாலை­களில், குப்­பையை அப்­பு­றப்­படுத்தும் பணி பெரும் சவா­லாக அமைந்துள்­ளது. இது­போன்ற சாலை­களில், காலை நேரத்தில் மாந­கராட்சி துப்­பு­ரவு பணி­யா­ளர்கள் குப்­பையை அப்­பு­றப்­ப­டுத்­து­கின்­றனர். ஆனால், ஒரு சில மணி நேரத்­தி­லேயே, கடை திறக்கும் உரி­மை­யா­ளர்கள், கடையில் உள்ள குப்­பையை மீண்டும் சாலையில் குவித்து வைக்­கின்­றனர்.

இந்த குப்பை காற்றில் தெரு முழு­வதும் பரவி, குப்பை மய­மாக காட்­சி­ய­ளிக்­கி­றது. இதை தடுக்க, அனைத்து கடை­களிலும் குப்பை தொட்­டிகள் கட்­டாயம் என்றும், கடைக்கு முன் சிறிய அளவில் குப்பை தேக்­க­ம­டைந்து இருந்தால் கூட, 500 ரூபாய் நிர்­வாக கட்டணம் வசூ­லிக்­கவும் மாநகராட்சி உத்­த­ர­விட்­டுள்­ளது.

ரூ.15 ஆயிரம்

இதுகுறித்து, அந்­தந்த துப்புரவு அலு­வலர், துப்­பு­ரவு ஆய்­வா­ளர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்­க­ளுக்கு ரசீது புத்­தகம் வழங்­கப்­பட்டு, கடந்த இரண்டு வாரங்­க­ளாக குப்­பையை தெருவில் வீசும் கடைக்­கா­ரர்­க­ளிடம் நிர்­வாக கட்­டணம் வசூலிக்­கப்­பட்டு வரு­கி­றது.

தேனாம்­பேட்டை மண்­ட­லத்தில், கடந்த வாரம், 15 ஆயிரம் ரூபாய் வரை குப்பை வீசி­ய­வர்­க­ளிடம் வசூ­லிக்­கப்­பட்­டது. அண்­ணா­நகர் மண்டலத்­திலும் இதே அளவு வசூல் நடந்­துள்­ளது.

எச்சரிக்கை

இது குறித்து மாந­க­ராட்சி சுகா­தார அதி­காரி ஒருவர் கூறியதா­வது:

குப்­பை­யில்லா சென்னை நக­ருக்கு வியா­பா­ரிகள் ஒத்துழைப்பு அவ­சியம் தேவை. கடை­களில் சேக­ர­மாகும் குப்பையை தொட்டியில் சேகரித்து, மாந­க­ராட்சி குப்பை தொட்­டியில் அதை கொட்ட வேண்டும். சாலையில் வீசு­வதை தவிர்க்­கவே இந்த நடவடிக்கை. ஓரிரு முறை எச்சரிக்­கைக்கு பிறகே கட்டணம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வாறு அவர் கூறினார்.

கடைக்­கா­ரர்கள் சிலர் கூறுகையில், ‘பல இடங்­களில் குப்பை தொட்­டிகள் நீண்ட துாரத்தில் உள்­ளன. மற்­ற­வர்கள் கடை முன் வீசும் குப்­பைக்கும், எங்­க­ளிடம் அப­ராதம் வசூ­லிப்­பது ஏற்க முடி­யாது' என்­றனர்.

 

தனியார் வசம் தெரு மின்விளக்கு பராமரிப்பு பணி

Print PDF

தினகரன்            08.08.2013

தனியார் வசம் தெரு மின்விளக்கு பராமரிப்பு பணி

வால்பாறை:வால்பாறையில்தெரு மின்விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க நகராட்சி தீர்மானித்துள்ளது. வால்பாறை நகராட்சியின் அவர கூட்டம், தலைவர் சத்தியவாணி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதிகளில் புதிய தெருவிளக்கு திட்டம் செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஓப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த மாதம் இத்திட்டத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். தனியார் வசம் தெருவிளக்கு சென்றுவிட்டால், முறையாக பராமரிப்பு செய்ய இயலாத, பண விரயமாகும், வால்பாறை பகுதியில் மழை அதிக அளவு பெய்வதால் புதிய எல்,இ.டி.விளக்கு அடிக்கடி செயல் இழக்கும், எனவே இத்திட்டம் மலைப்பகுதிக்கு சரிபட்டு வராது, எல்.இ.டி தெருவிளக்கு அதிக ஒளிச்சிதறல் இல்லாமல் இருக்கும் எனவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்கும் அபாயம் உள்ளது என கூறி, ஒப்புதல் கேட்டு வரப்பெற்ற தீர்மானத்தை நிராகரித்தனர்.

 


Page 129 of 506