Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு தரவேண்டும்

Print PDF

தினத்தந்தி             08.08.2013

மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு தரவேண்டும்

மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆணையர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆணையர் தண்டபாணி தலைமையில் நுகர்வோர் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளுடன் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையர் பேசியதாவது:–

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நுகர்வோரின் வசதிக்கேற்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுகர்வோர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மாநகர பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

பூங்காக்கள்

மேலும் மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவை வழங்கும் கால அவகாசம் பற்றிய விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குரிய பூங்காக்கள் மேம்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாசலம், நகர் நல அலுவலர் அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி, பாஸ்கர், தனபாலன், ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் புஷ்பவனம், சகுந்தலா சீனிவாசன், உமா முத்துசாமி, சேகரன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி புதிய பகுதிகளில் சொத்து வரி சீரமைக்கப்படும்: அதிகாரி தகவல்

Print PDF

மாலை மலர்             07.08.2013

மாநகராட்சி புதிய பகுதிகளில் சொத்து வரி சீரமைக்கப்படும்: அதிகாரி தகவல்
 
மாநகராட்சி புதிய பகுதிகளில் சொத்து வரி சீரமைக்கப்படும்: அதிகாரி தகவல்மாநகராட்சி புதிய பகுதியில் சொத்து வரி சீரமைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 3000 புதிய சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 40 சதவீத சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவதற்குள் 80 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டு விடும். இந்த ஆண்டு ரூ 510 கோடி சொத்து வரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய வரி பாக்கியையும் சேர்த்து ரூ. 700 கோடி வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டது. இதில் ரூ. 461 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் வரி செலுத்தவது அதிகரித்துள்ளது. இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சி செய்யப்படும்.

பழைய மாநகராட்சி பகுதிகளை விட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சொத்து வரி அதிகம் என்று புகார்கள் வருகின்றன. இதனை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் சொத்து வரி மதிப்பீடு திருத்தியமைக்கப்படும் அப்போது இந்த வித்தியாசம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மேயர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி             07.08.2013

மேயர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தேசிய அடையாள அட்டையின் இரண்டாம் கட்ட பதிவு பணியை மேயர்  வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

  திருமலை நாயக்கர் மகால் திருவள்ளுவர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திரெüபதி அம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட பதிவுப் பணி ஆக. 5 முதல் ஆக. 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் பணியை மேயர் ராஜன்செல்லப்பா, ஆணையர் நந்தகோபால் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

 துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயகீதா, தங்கவேல், ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 


Page 130 of 506