Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி வரி செலுத்தாதவர் பெயர்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

Print PDF

தினமணி             07.08.2013

மாநகராட்சி வரி செலுத்தாதவர் பெயர்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

மதுரை மாநகராட்சியில் நீண்டகாலமாக வரி செலுத்தாமல் வரி நிலுவை உள்ளவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

   மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம், பாதாளச் சாக்கடை பங்களிப்புத் தொகை, தொழில் வரி மற்றும் மாதவாடகை கடைகளின் வாடகைத் தொகை உள்ளிட்ட வரிகளை பலர் நீண்டகாலமாகச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

 வரி பாக்கி வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் நிலுவை வரிகளைச் செலுத்த வேண்டும். இல்லையேல், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

    மேலும், நிலுவை வரி செலுத்தாதவர்கள் மீது, மதுரை மாநகராட்சி சட்டம் 1971-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடிக்கவில்லை பாதாள சாக்கடை ஒப்பந்தம் ரத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது

Print PDF
தினகரன்        06.08.2013

குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடிக்கவில்லை பாதாள சாக்கடை ஒப்பந்தம் ரத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது

ஈரோடு: குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்காததால் 1வது பேக்கேஜ் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், பெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகள் இணைத்து ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள 30.9.2008 மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டு 11.12.2008ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதியில் 506 கி.மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடைகள் அமைக்கப்படவுள்ளது. இதில் 1வது பேக்கேஜில் 201 கி.மீட்டரில் 86.85 கி.மீட்டரும், 2வது பேக்கேஜில் 110 கி.மீட்டரில் 5 கி.மீட்டரும், 3வது பேக்கேஜில் 106 கி.மீட்டரில் 99.48 கி.மீட்டரும், 4வது பேக்கேஜில் 89 கி.மீட்டரில் 41 கி.மீட்டரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் 5வது பேக்கேஜான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

4 பேக்கேஜ்கள் குழாய்கள் அமைத்தல் பணிகளும், ஒரு பேக்கேஜ் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான பணிகளும் என 5 பேக்கேஜ்களாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை பணிகளுக்கு குழிகள் தோண்டி ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். ஆணையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாதாள சாக்கடை 1வது பேக்கேஜில் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காததால் அதனை ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1வது பேக்கேஜ் பகுதியான காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் அமைக்க 59.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. 1வது பேக்«ஜில் முதல் மைல்கல்லில் இருந்து 20.1.2010 முதல் 19.1.2011ம் காலக்கட்டத்தில் 101 கி.மீட்டருக்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், 3.45 கி.மீட்டருக்கு பம்பிங் மெயின் அமைத்தல் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆனால் 27 கி.மீட்டருக்கு மட்டுமே கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. பம்பிங் மெயின் பதித்தல் பணி ஏதும் செய்யவில்லை. 2வது மைல்கல்லில் இருந்து 151 கி.மீட்டருக்கு கழிவுநீர் குழாய்கள், 2.74 கி.மீட்டருக்கு பம்பிங் மெயின் பதித்தல் போன்ற பணிகள் ஒதுக்கீட்டில் 46 கி.மீட்டருக்கு மட்டுமே பணிகள் செய்யப்பட்டுள்ளது. 3வது மைல் கல்லில் இருந்து 201.557 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள், 3.86 கி.மீட்டருக்கு பம்பிங் மெயின் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில் 80 கி.மீட்டருக்கு மட்டுமே பணிகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த பகுதியில் பாதாள சாக்கடை  பணிகளை மேற்கொள்வதில் மெத்தனமாக இருந்ததால் ஐதராபாத்தை சேர்ந்த கேஆர்ஆர்ஐ, டாபி என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தவிதியின்படி 24.84 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் காலக்கெடு கேட்டனர். இதையடுத்து மீண்டும் 6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட பணிகளை முடிக்க வேண்டும் என்று காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் இதில் 86.85 கி.மீட்டருக்கு கழிவுநீர் குழாய்களும், 2.70 கி.மீட்டருக்கு மட்டுமே பம்பிங் மெயின் குழாய்களும் பதிக்கப்பட்டது.

கடந்த 42 மாதங்களில் குறிப்பிட்ட பணிகளை முடிக்காததால் இவர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரிடம் சட்ட கருத்துரு கோரப்பட்டது. இதற்கு அரசு வழக்கறிஞர் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கி ஒப்பந்த விதிகளின்படி ரத்து செய்ய அறிவுரை வழங்கினார். இதற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பணியை ரத்து செய்தது குறித்து உயர்நீதிமன்றம் எவ்வித தடையும் அளிக்காத நிலையில் நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பாதாள சாக்கடை  கட்டும் பணியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தேசிய அடையாள அட்டை பதிவு பணி: மேயர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி               06.08.2013

தேசிய அடையாள அட்டை பதிவு பணி: மேயர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தேசிய அடையாள அட்டையின் இரண்டாம் கட்ட பதிவு பணியை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

 மதுரை திருமலை நாயக்கர் மகால் திருவள்ளுவர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திரெüபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட பதிவு பணி ஆக.5 முதல் ஆக.12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் பணியை மேயர் ராஜன்செல்லப்பா, ஆணையர் நந்தகோபால் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

  துணை ஆணையர்(பொறுப்பு) சின்னம்மாள், சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயகீதா, தங்கவேல், ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 


Page 131 of 506