Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சேலம் மாநகராட்சி பகுதியில், அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஆணையாளர் அசோகன் தகவல்

Print PDF

தினத்தந்தி          05.08.2013

சேலம் மாநகராட்சி பகுதியில், அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஆணையாளர் அசோகன் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

மரங்களை பாதுகாக்க

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை தடை செய்துள்ளது. மேற்படி மழைப்பிரதேசத்தினை பசுமைப் பகுதிகளாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள், தனியார் நிலங்கள் ஆகியவற்றில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டியது மாநகராட்சியின் முக்கிய கடமையாக உள்ளது.அவ்வாறு மரங்கள் பாதுகாக்கப்பட்டால் தான் மழை வளம் கிடைக்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு மாநகரம் செழுமையாக இருக்கும்.

சட்டப்படி நடவடிக்கை

இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள உயிருடன் அல்லது பட்டுபோன மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றாலோ, மின் கம்பிகள் மீது மோதுவதாக இருந்தாலோ, குடியிருப்பு கட்டிடங்கள் மீது விழுந்தாலோ அதனை அந்த பகுதி மக்களோ அல்லது கட்டிட உரிமையாளர்களோ தன்னிச்சையாக வெட்டி அப்புறப்படுத்தக் கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை மாநகராட்சிக்கு விண்ணப்பம் செய்தால் வருவாய்துறையின் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேற்படி உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்டும் நபர்கள் மீது போலீஸ் துறை மூலம் சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாநகரப் பகுதியில் வாழும் பொதுமக்கள் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

 

போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை

Print PDF

தினமலர்             03.08.2013

போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை

சென்னை:போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாந­கராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்­பட உள்­ளனர். இதற்­கான நட­வ­டிக்கையில் மாந­க­ராட்சி தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர், போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் வெளி­யா­னது. இதுகுறித்து, மாந­க­ராட்சி விஜிலென்ஸ் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வந்­தனர். இந்த சம்­பவம் குறித்து, ‘தின­மலர்' நாளிதழ் விரி­வான செய்தி வெளி­யா­னது.

இதை­ய­டுத்து, சர்ச்­சையில் சிக்­கிய போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்­களை பணி நீக்கம் செய்ய மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

சான்­றிதழ் போலி என உறுதி செய்­யப்­பட்­டுள்ள, 10 பேரை விரைவில் பணி நீக்கம் செய்­யவும், இந்த சர்ச்சை பட்­டி­யலில் உள்ள, 126 பேர் மீதான விசா­ர­ணையை தீவிரப்­ப­டுத்­தவும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

இதில், பல ஆசி­ரி­யர்கள் விசா­ர­ணைக்கு ஒத்துழைக்க மறுப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனால் அவர்கள் மீது சந்­தேகம் வலுத்­துள்­ளது. விசா­ர­ணைக்கு வர மறுக்கும் ஆசி­ரி­யர்கள் மீதும் கடு­மை­யான நட­வடிக்கை எடுக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. 

 

குடிநீர் திருட்டு: 55 மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமணி              02.08.2013

குடிநீர் திருட்டு: 55 மின் மோட்டார்கள் பறிமுதல்

திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்த 55 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் 5 மோட்டார்களுக்கு தலா ரூ. 12,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது என நகர் மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி மற்றும் துணைத் தலைவர் பொ. சக்திவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:

  நகருக்கு குடிநீர் ஆதாரங்களாக உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு வரும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும், நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கக் கூடாது என வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

  இந்த நிலையில் பல வீடுகளில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சியின் குடிநீர் திட்டப் பணியாளர்கள் கடந்த 16.7.2013 முதல்  சோதனை செய்யத் தொடங்கினார்கள்.

சோதனையில் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட 55 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 5 பேர் தலா ரூ. 12,500 அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர் என்றார்கள்.

 


Page 133 of 506