Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஏழு நாளில் கட்­டட அனு­மதி மாந­க­ராட்சியில் இன்று முதல் அமல்­

Print PDF

தினமலர்             02.08.2013

ஏழு நாளில் கட்­டட அனு­மதி மாந­க­ராட்சியில் இன்று முதல் அமல்­


சென்னை:சி.எம்.டி.ஏ.,வில் இருப்­பதை போல, சென்னை மாந­க­ராட்­சி­யிலும், விண்­ணப்­பித்த ஏழு நாட்­களில், கட்­டு­மான அனு­மதி வழங்கும் பசுமை வழி திட்டம், இன்று முதல், அம­லுக்கு வரு­கி­றது.

சென்னை மாந­க­ராட்­சியில், பொது­மக்கள் அதி­க­மாக அலைந்து திரியும் பல விஷ­யங்­களில் ஒன்று, கட்­டு­மான அனு­மதி. மாந­க­ராட்சி எவ்­வ­ளவு தான் ஆன்–லைன் விண்­ணப்பம், ஒரு மாதத்தில் கட்­டட அனு­மதி பெறும் திட்டம் என, பல்­வேறு முறை­களை அமல்­ப­டுத்­தி­னாலும், கட்­டு­மான அனு­மதி கிடைப்­பதில் தொடர்ந்து தாமதம் ஏற்­பட்டு வரு­கி­றது.

இதற்கு தீர்­வாக, சி.எம்.டி.ஏ.,வில் உள்­ளதை போல, பசுமை வழியில் கட்­டட அனு­மதி வழங்கும் சிறப்பு திட்­டத்தை, மாந­க­ராட்சி இன்று முதல் அமல்­ப­டுத்­து­கி­றது. இந்த திட்­டத்தில் விண்­ணப்­பித்தால், எந்த ஆய்வும் செய்­யப்­ப­டா­ம­லேயே ஏழு நாட்­களில் கட்­டட அனு­மதி கிடைக்கும். ஆனால், அனு­மதி வழங்­கிய பின், மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கள ஆய்வு மேற்­கொள்வர். அப்­போது விதி­மீறல் இருந்தால், கொடுத்த அனு­மதி திரும்ப பெறப்­படும். விதி­க­ளுக்கு உட்­பட்டு நடப்­ப­வர்­க­ளுக்கு இந்த முறை ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து மாந­க­ராட்சி உயர் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கட்­டட அனு­மதி விஷ­யத்தில் எப்­ப­டி­யா­வது லஞ்­சத்தை ஒழிக்க வேண்டும் என்­பதே இலக்கு. இதனால் தான் பசுமை வழி திட்டம் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இன்று இந்த திட்­டத்தை மேயர் துவக்கி வைக்­கிறார். விதி­களை மதிப்­ப­வர்­க­ளுக்கு இந்த முறையில் ஏழு நாட்­களில் அனு­மதி கிடைக்கும். அவர்கள் வங்கி கடன் போன்­ற­வற்றை பெற்று கட்­டு­மான பணி­களை தொட­ரலாம். இந்த முறை வர­வேற்பை பெறும் என்று எதிர்­பார்க்­கிறோம். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

 

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் விரைவில் துப்புரவுப் பணிகள்: தெற்கு தில்லி மேயர் உறுதி

Print PDF

தினமணி               01.08.2013 

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் விரைவில் துப்புரவுப் பணிகள்: தெற்கு தில்லி மேயர் உறுதி

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் விரைவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெற்கு தில்லி மேயர் சரிதா செளத்ரி தெரிவித்தார்.

தெற்கு தில்லி குசும்பூர் வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாநகராட்சிப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தெற்கு தில்லி மாநகராட்சியின் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக தெற்கு தில்லி முழுவதும் உள்ள வார்டுகளில் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் துப்பரவுப் பணிகள் செம்மையாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குசும்பூர் பகுதியில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. தெருக்களில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பது உள்ளிட்டவை ஆய்வின் போது தெரிய வந்தது.

அங்கு போதுமான தெரு விளக்குகள் அமைக்கவும், குப்பைகளை அகற்றி தெருக்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வசந்த் விஹார் மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தேன்.

மதிய உணவின் தரத்தை கண்காணிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சரிதா செளத்ரி.

 

தருமபுரி அரசு மருத்துவமனை, நகராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி               01.08.2013 

தருமபுரி அரசு மருத்துவமனை, நகராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் புதன்கிழமை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு 500 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடமும், நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் திட்ட விவரங்களை கேட்டறிந்த அவர், திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் பதாகைகளை ஆங்காங்கே இடம்பெறச் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்.

 தொடர்ந்து, அங்கிருந்த பிறவி குறைபாடு சிகிச்சை மையம், புறநோயாளிகள் பிரிவு, பால்வினை நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு, நோயாளிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

 மருத்துவமனைக்கு புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட நவீன உபகரணங்கள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அவற்றை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார்.

 தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகளை விரைந்து கொள்முதல் செய்து மருத்துவமனையில் இடம்பெறச் செய்ய வேண்டும். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகப் பழையக் கட்டடத்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும்.

 மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டுமெனில், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி எண் நோயாளிகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. பாரதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆர்.சுரபி, கண்காணிப்பாளர் கே. சிவக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி. விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

 நகராட்சி: இதேபோல, தருமபுரி நகராட்சிக்குள்பட்ட சேலம் பிரதான சாலை, ஆறுமுக ஆசாரி தெரு, பேருந்து நிலைய சுற்றுப் பகுதி, செங்கொடிபுரம், கந்தசாமி வாத்தியார் தெரு, பென்னாகரம் சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், குப்பைகள் இல்லாத நகராட்சியாக தருமபுரியை மாற்றவும் அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.க. வீரணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அ. குருசாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 

 


Page 134 of 506