Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

Print PDF

மாலை மலர்              31.07.2013

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றும் ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 122 துவக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000–க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் 1995–ம் ஆண்டு முதல் 2000–ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியாகும்.

ஆனால் அப்போது பணி நியமனம் பெற்றவர்கள் பலர் முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்து இருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இது குறித்து மாநகராட்சி கல்வித் துறை கவனத்திற்கு வந்ததும் விரிவான விசாரணை நடத்த விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், சிலர் கொடுத்த சான்றிதழ்களில் பயிற்சி பெற்றவர்கள் வெளி இடத்தில் பணிபுரிந்து வருவதும் பெயர் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. எத்தனை பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

மோசடி புகார் பட்டியலில் 51 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியராக பணிபுரிபவர்களின் உறவினர்களும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டாலும் 28 பேர் மட்டுமே இதுவரையில் முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கல்வி சான்றிதழ் நகல்களை அரசு தேர்வுத் துறையிடம் கொடுத்து அவற்றின் உண்மை தன்மை அறியும் பணி நடந்து வருகிறது. ஒரிஜினல் சான்றிதழ் இருந்தால் விரைவாக இந்த பணியை முடிக்கலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளதால் சந்தேகப்படக் கூடிய ஆசிரியர்களிடம் ஒரிஜினல் சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரிஜினல் சான்றிதழுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி கல்வித்துறை மோசடியில் சிக்கியுள்ள ஆசிரியர்களிடம் சான்றிதழ் வாங்கிய பின்னர் இந்த போலி சான்றிதழ் விவகாரத்தில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

அதனை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும். கடந்த ஒரு ஆண்டாக நடந்து வரும் இந்த பிரச்சினையை விரைவாக முடிக்க மாநகராட்சி கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.
 

சி.எம்.டி.ஏ.,வில் மெட்ரோ ரயில் பிரி­வுக்கு மீண்டும் நீட்­டிப்பு 4 பத­வி­க­ளுக்கு மட்டும் ஒப்­புதல்

Print PDF
தினமலர்            31.07.2013

சி.எம்.டி.ஏ.,வில் மெட்ரோ ரயில் பிரி­வுக்கு மீண்டும் நீட்­டிப்பு 4 பத­வி­க­ளுக்கு மட்டும் ஒப்­புதல்


சென்னை பெரு­நகர் வளர்ச்சி குழு­மத்தில் (சி.எம்.டி.ஏ.,) உள்ள மெட்ரோ ரயில் பிரி­வுக்கு மேலும் ஓராண்­டுக்கு நீட்டிப்பு வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்­புதல் அளித்­துள்­ளது.

சென்­னையில் மெட்ரோ ரயில் திட்டத்­துக்­கான ஆரம்ப கட்ட பணி­க­ளுக்­காக, சி.எம்.டி.ஏ.,வில், தலைமை திட்ட அலுவலர், தலைமை கணக்கு அலு­வலர் உள்­ளிட்ட, 10 பணி­யி­டங்­களுடன், 2007, ஜூலையில் தனி பிரிவு துவக்­கப்­பட்­டது.

பின், 2007ல், சென்னை மெட்ரோ ரயில் நிறு­வனம் துவக்­கப்­பட்­ட­தை­அடுத்து, மெட்ரோ ரயில் பிரி­வுக்­கான ஊதியம் உள்­ளிட்ட செலவு தொகையை ஈடு செய்ய, சி.எம்.டி.ஏ., சென்னை மெட்ரோ ரயில் நிறு­வ­னத்­திடம் கோரியது. இதை ஏற்க மெட்ரோ ரயில் நிர்­வாகம் மறுத்­தது.

அனு­மதி

இந்த நிலையில்,'மெட்ரோ ரயில் சார்ந்த பிற வளர்ச்சி திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வதில் ஒருங்­கி­ணைப்பை ஏற்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பணி­க­ளுக்­காக இந்த பிரிவு தொடர்ந்து செயல்­பட அனு­மதி அளிக்க வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., உறுப்­பினர் செயலர் தமிழக அரசுக்கு வேண்­டுகோள் விடுத்தார்.

இதை­யேற்று, 2011, ஜூன், 22ம் தேதி வரை செயல்­பட, அந்த பிரி­வுக்கு நீட்­டிப்பு வழங்­கப்­பட்­டது. இதன் பின் ஒவ்­வொரு ஆண்டும், சி.எம்.டி.ஏ., அதிகா­ரிகள் கோரிக்கை அடிப்­ப­டையில் நீட்­டிப்பு வழங்­கப்­பட்­டது. கடந்த, 2012ம் ஆண்டு கொடுக்­கப்­பட்ட நீட்­டிப்பு, ஜூன் மாதத்­துடன் முடிந்­தது.

அந்த பிரி­வுக்கு மீண்டும் நீட்­டிப்பு வழங்க அனு­மதி கோரி, சி.எம்.டி.ஏ., அதி­கா­ரிகள் மெட்ரோ ரயில் நிர்­வா­கத்­துக்கு கடிதம் எழு­தி­யி­ருந்­தனர்.

சி.எம்.ஆர்.எல்., ஒப்­புதல்

இந்த நிலையில், கடந்த ஆண்டு அனு­மதி வழங்­கப்­பட்­டது போன்று, முதன்மை திட்ட அமைப்­பாளர், துணை திட்ட அமைப்­பாளர், உதவி திட்ட அமைப்­பாளர், முதல் நிலை சுருக்­கெழுத்து தட்­டச்சர் என, நான்கு பத­வி­களுடன் அந்த பிரிவு மேலும் ஓராண்­டுக்கு செயல்­பட மெட்ரோ ரயில் நிறு­வனம் ஒப்­புதல் அளித்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

இது தொடர்­பாக, அரசை அணுகி, அர­சா­ணையை பெற்று கொள்­ளலாம் என, குறிப்­பிட்டு மெட்ரோ ரயில் நிர்­வாக இயக்­குனர் அலு­வ­ல­கத்தில் இருந்து, சி.எம்.டி.ஏ., உறுப்­பினர் செயல­ருக்கு கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் தகவல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தற்­போது, மாஸ்கோ சென்­றி­ருக்கும், சி.எம்.டி.ஏ., உறுப்­பினர் செயலர், நாடு திரும்­பி­யதும் இது தொடர்­பான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என, தெரி­கி­றது.
 

குடிநீருடன் சாக்கடை கலந்ததை புதிய குழாய் அமைத்து சரிசெய்தனர்

Print PDF
தினகரன்       31.07.2013

குடிநீருடன் சாக்கடை கலந்ததை புதிய குழாய் அமைத்து சரிசெய்தனர்


பவானிசாகர்: புன்செய் புளியம்பட்டி 16வது வார்டில் திருவிக வீதியில் கண்ணப்பர் மஹால் அருகில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் வந்து கொண்டிருந்தது. இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் கடந்த 22ம் தேதி அன்று வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தனர். இதன்மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றி கழிவு நீர், குடிநீருடன் கலக்காதபடி முற்றிலும் சரிசெய்யப்பட்டு உள்ளது. தற்போது, புதிய குழாயில் குடிநீர் மிகவும் சுத்தமாக வருகிறது. கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த இப்பிரச்னை முடிவுக்கு வர காரணமாக இருந்த தினகரன் பத்திரிகைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் நன்றி தெரிவித்துள்ளனர்.
 


Page 135 of 506