Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தாராபுரம் நகராட்சியை தரம் உயர்த்தப் பரிந்துரை

Print PDF

தினமணி                31.07.2013 

தாராபுரம் நகராட்சியை தரம் உயர்த்தப் பரிந்துரை

தாராபுரம் நகராட்சியைத் தரம் உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்றால் அதன் பரப்பளவு மற்றும் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

   எனவே நகரை சுற்றியுள்ள கொண்டரசம்பாளையம், பெஸ்ட் நகர், ராம்நகர், தெக்காலூர், நஞ்சியம்பாளையம், கணபதிபாளையம் ஆகிய ஊர்களை தாராபுரம் நகராட்சி பகுதியுடன் இணைத்தால் வருவாய் பெருகும்.

   அதேபோல் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால் தேர்வுநிலை நகராட்சியாக மாற்ற முடியும்.

  எனவே சுற்றுப்புறப் பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து வருவாயை பெருக்கவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகராட்சியை தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  நகராட்சி தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி தாராளமாக கிடைக்கும். இதன் மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் நகருக்கு மெட்ரோ சிட்டி அந்தஸ்தையும் பெறமுடியும்.

   இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

 

குடிநீர் திருடியதாக 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமணி                31.07.2013 

குடிநீர் திருடியதாக 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

நகராட்சி ஆணையரின் நடவடிக்கை காரணமாக, பெரியகுளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடியதாக, திங்கள்கிழமை 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  பெரியகுளம் நகராட்சி உள்ள 30 வார்டுகளிலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடுவதால், பெரும்பாலானோருக்கு குடிநீர் சரிவர கிடைக்காமல், அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது.

  இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஆர். மகேஸ்வரி, பொறியாளர் வி. சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் டி. ஜெயசீலன், ஓவர்சீயர் ஆர். பிரதாப் சந்திரன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருடன், திங்கள்கிழமை நகர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

 அப்போது, 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

  இனிமேல், பொதுமக்கள் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் பிடிக்கக் கூடாது என்றும், மீறி செயல்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆணையர் ஆர். மகேஸ்வரி          எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் மேயர் சசிகலா புஷ்பா தகவல்

Print PDF

தினத்தந்தி         30.07.2013 

தூத்துக்குடி மாநகராட்சி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் மேயர் சசிகலா புஷ்பா தகவல்


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மேயர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பயிற்சி மையம்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 2013–14–ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 7–9–2013 அன்று முதல் தொடங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் 18–8–2013–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 1–9–2013 அன்று மாதிரி தேர்வு மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

போட்டித் தேர்வுகள்

போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ–மாணவிகளும் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இலவச பயிற்சி வகுப்பு மற்றும் விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை 90478 55151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

இவ்வாறு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

 


Page 136 of 506