Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னையில் விளம்பர பலகைகள் வைக்க புதிய நிபந்தனைகள்

Print PDF

தினமணி              29.07.2013 

சென்னையில் விளம்பர பலகைகள் வைக்க புதிய நிபந்தனைகள்

சென்னையில் தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பேனர்கள் வைப்பது தொடர்பாக புதிய நிபந்தனைகளுடன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க வீட்டு உரிமையாளர் மற்றும் போலீஸாரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் வீடுகள் அருகில் பேனர் அமைவதாக இருந்தால் வீட்டு உரிமையாளரிடம் தடையில்லா சான்று, அந்த தெருவின் வரை படம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். ரூ.200 கட்டணமும் செலுத்த வேண்டும்.

சாலை நடுவில் 4க்கு 2.5 அளவிலும், 3க்கு 2 அளவிலும் வைப்பதற்கு அனுமதிக்கப்படும். 6 நாட்கள் விளம்பர பேனர்களை வைத்து கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தலைமையில் நடந்தது.

கூட்டத்ததில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

கட்சிகளின் கருத்துக்கள் அனைத்தும் அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறினார்.

 

நவீன பேருந்து நிழற்­கு­டைகள் திட்டம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயார்

Print PDF

தினமலர்        27.07.2013

நவீன பேருந்து நிழற்­கு­டைகள் திட்டம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயார்

சென்னை:சென்­னையில், 108 இடங்­களில் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க ஒப்­பந்தம் இறுதி செய்­யப்­பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் பணி ஆணை வழங்க மாந­க­ராட்சி தயா­ரா­கி­யுள்­ளது.

சென்­னையில் கட்­டுதல், பரா­ம­ரித்தல், ஒப்படைத்தல் முறையில் பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க, தனி­யாரிடம் வர­வேற்பு இல்­லாத நிலையில், மாந­க­ராட்­சியே பேருந்து நிழற்­கு­டை­களை அமைக்க முன்­வந்­தது.

அதன்­படி, 50 கோடி ரூபாய் செலவில், 500 இடங்களில் நிழற்­கு­டைகள் அமைய உள்­ளன. முதல்­கட்ட­மாக, 108 இடங்­களில் துருப்­பி­டிக்­காத குழாய்கள் மூலம் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க, 11 கோடி ரூபாய்க்கு ஐந்து கட்­டங்­க­ளாக ஒப்­பந்தம் கோரப்­பட்­டி­ருந்­தது.

இதில் மொத்தம் நான்கு நிறு­வ­னங்கள் பங்­கேற்­றன. பல­கட்ட ஆய்­வு­க­ளுக்கு பிறகு ஒரு நிறு­வ­னத்­திற்கு பணி­களை வழங்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. இதற்­கான பணி ஆணை மாந­க­ராட்சி கூட்­டத்தில் ஒப்புதல் பெறப்­பட்டு, அடுத்த வாரம் வழங்­கப்­பட உள்ளது.

அடுத்­த­கட்­ட­மாக, 100 இடங்­களில் நவீன பேருந்து நிழற்­கு­டைகள் அமைக்க ஒப்­பந்தம் தயா­ராகி வருவதாக, மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 

நான்கு அடுக்கு குடியிருப்புக்கு திட்ட அனுமதி மறுப்பு சி.எம்.டி.ஏ., உத்தரவு செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினமலர்        27.07.2013

நான்கு அடுக்கு குடியிருப்புக்கு திட்ட அனுமதி மறுப்பு சி.எம்.டி.ஏ., உத்தரவு செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:"சென்னையை அடுத்த, பூந்தமல்லி தாலுகாவில், 396 வீடுகள் அடங்கிய, நான்கு அடுக்கு குடியிருப்பு கட்ட, திட்ட அனுமதி வழங்க மறுத்தது செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பூந்தமல்லி தாலுகாவில், மேலகரம் மற்றும் அகரமேல் கிராமத்தில், 396, வீடுகள் அடங்கிய, தரை மற்றும் நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு, திட்ட அனுமதி கோரி, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்திடம், தனியார் கட்டுமான நிறுவனம் விண்ணப்பித்தது. சாலையின் அகலம் போதுமானதாக இல்லை என்பதால், விண்ணப்பத்தை, சி.எம்.டி.ஏ., நிராகரித்தது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், கட்டுமான நிறுவனம் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திட்ட அனுமதி வழங்கும்படி, சி.டி.எம்.ஏ.,க்கு உத்தரவிடக் கோரப்பட்டது. சாலையின் அகலம் பற்றி சர்ச்சை உள்ளதால், அட்வகேட் கமிஷனரை, ஐகோர்ட் நியமித்தது. அவரும், கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, திட்ட அனுமதி வழங்கும்படி, சி.எம்.டி.ஏ.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., தரப்பில், அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.

சி.எம்.டி.ஏ., சார்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல் அரவிந்த்பாண்டியன், வழக்கறிஞர் ராஜா சீனிவாஸ், ""திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, வீட்டுவசதி செயலரிடம் அப்பீல் செய்யவில்லை. அட்வகேட் கமிஷனரின் அறிக்கை, தோராயமாக உள்ளது. சட்டப்படி, தேவையான அளவுக்கும் குறைவாக தான், சாலையின் அகலம் உள்ளது,'' என, வாதாடினர்.

மனுவை விசாரித்த, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

அட்வகேட் கமிஷனரின் அறிக்கைக்கு, சி.எம்.டி.ஏ., தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டும், அதை, பரிசீலிக்கவில்லை. "திட்ட அனுமதி வழங்கினால், அங்கு குடியிருப்புகள் வரும்; மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்; குறைந்தபட்ச சாலை அகலம் இருந்தால் தான், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்; இல்லையென்றால், அசவுகரியம் ஏற்படும்' என, கூடுதல் அட்வகேட்ஜெனரல் தெரிவித்தார்.

இதுபோன்ற அனுமதியை வழங்கினால், மற்ற கட்டுமான நிறுவனங்களும், களத்தில் குதித்து விடுவர். தங்களுக்கும் அனுமதி கோருவர். சட்டப்படி தேவையான அளவு இல்லாததால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தே, திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ரிட் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

 


Page 138 of 506