Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

Print PDF

தினமலர்        27.07.2013

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

மதுரை:வீட்டுவசதிவாரியம் ரூ. 1.58 கோடி செலுத்தியதால், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காலனி, டீன்ஸ் குடியிருப்பு பகுதிகளை, மதுரை மாநகராட்சி பராமரிக்க எடுத்துக் கொண்டது.

இப்பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், பெரும்பாலும் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். வீட்டுவசதி வாரியம் பராமரிப்பில் இருந்த இவ்வீடுகள், மோசமான நிலையில் இருப்பதுடன், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை, குப்பை, குடிநீர், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதியை சரிசெய்யும்படி மனுகொடுத்தால், வீட்டுவசதி வாரியமும், மாநகராட்சியும், "இது எங்கள் பொறுப்பில் இல்லை' எனக்கூறி, தட்டிக் கழித்துவிடுகின்றன. இதனால் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை.

இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, மாநகராட்சிக்கு இந்தப் பகுதிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டடங்கள் அளவு அடிப்படையில் ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 200ஐ, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சாலமன்ஜெயகுமார், மாநகராட்சிக்கு வழங்கினார். இதையடுத்து, இப் பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. இனி இப்பகுதிகளின் அடிப்படை வசதிகளை மாநகராட்சியே பராமரிக்கும். 

 

பிளாஸ்டிக் கழிவு குப்பையை ஒப்படைத்தால் தங்க நாணயம்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

Print PDF

மாலை மலர்             27.07.2013

பிளாஸ்டிக் கழிவு குப்பையை ஒப்படைத்தால் தங்க நாணயம்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு
 
பிளாஸ்டிக் கழிவு குப்பையை ஒப்படைத்தால் தங்க நாணயம்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும்  தற்போது தேவைப்படும் கூடுதல் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க துப்புரவு பணியை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் கண்காணிக்க புதிய முறை தற்போது அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு பணியாளர் ஒரு தெருவை சுத்தம் செய்துவிட்டு அந்த தெருவில் உள்ள வெவ்வேறு கதவு இலக்கம் கொண்ட வீட்டின் உரிமையாளர்களிடமோ, வசிப்பவர்களிடமோ, அந்த ஊழியர் கையெழுத்து வாங்க வேண்டும். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றையும் துப்புரவு ஊழியர் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெறப்பட்ட விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். புதிய முறை அமல்படுத்தப்பட்டால் தெருக்களில் குப்பைகள் தேங்காது சுத்தமாக இருக்கும். இந்த பணியில் தொய்வு இருந்தால் கவுன்சிலர்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவன்சிலர் தமிழ் செல்வன்:- 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை தடை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேயர் சைதை துரைசாமி:- தினசரி உருவாகும் குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித் தெடுப்பது அவசியமாகிறது. முதற்கட்டமாக ஒரு சதவீதம் என்ற அளவிற்கு 48 மெட்ரிக்டன் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து மாநகராட்சியிடம் வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்க பரிசு வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்வு செய்து வார்டு ஒன்றுக்கு கிராம் தங்க நாணயம் மற்றும் அடுத்த 5 நபர்களுக்கு கை கடிகாரம் வழங்கப்படும்.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கொண்டு வந்து தரும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு கிலோவிற்கும் நம்பருடன் கூடிய டோக்கன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிகம் டோக்கன் பெறும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்வது பற்றி மாநகராட்சியின் பொது சுகாதார துறை மூலம் சட்டபூர்வ ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மேயர் துரைசாமி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் செலவில் 600 கண்காணிப்பு காமிராக்கள் வாங்கப்படும். இதன் மூலம் அம்மா உணவகங்களில் நடைபெறும் நிகழ்வுகள் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்க 200 இணைய தள இணைப்புகள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடுகளுக்கு பல துறைகளை சார்ந்த கல்வியை (சி.ஏ, ஐ.சி.டபிள்ï.ஏ, எம்.பி. பி.எஸ்., பி.இ., டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்) அகில இந்திய மாநில அளவிலான பல வேலை வாய்ப்புகளை பெற போட்டி தேர்வுகள் எழுத இலவச பயிற்சி அளிக்கப்படும்.

ராயபுரம் ரெயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள 240 இரவு காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.      
 

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு காலவாதியான குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் பறிமுதல்

Print PDF

தினத்தந்தி             27.07.2013

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு காலவாதியான குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் பறிமுதல்

தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

காலவாதியான பொருட்கள்

தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை போட்டிபோட்டு ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறார்கள்.

இந்த பஸ் நிலையத்திற்கு வெளியூர் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதால் பஸ் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், மற்றும் இதர பலகாரங்கள் தரமற்றதாகவும், தேதி காலவதியானதாக இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமாருக்கு புகார் வந்தது.

அதிரடி ஆய்வு

இதையடுத்து ஆணையாளர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு தாராபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர் ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பிஸ்கட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களில் தேதி காலவதியாகி இருப்பதும், குடிநீரின் நிறம் மாறி இருப்பதும் அவற்றை பயணிகளிடம் ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பிஸ்கட்டுகள் பறிமுதல்

மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரஸ்க், பிஸ்கட்டுகளில் கடந்த ஜனவரி மாதமே தேதி காலவதியாகி இருந்தது. சிலவற்றில் தயாரிக்கப்பட்ட தேதி எதுவும் இல்லை. இதையடுத்து அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சிலகடைகளில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியது. அவற்றையும் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களை எச்சரிக்கை செய்த ஆணையாளர் அவற்றை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறும் போது:–

பஸ் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து பொருட்களிலும் தயாரிக்கப்பட்ட தேதி, காலவதியாகும் தேதி கட்டாயம் குறித்து இருக்க வேண்டும். லேபிள் இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 139 of 506