Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 2வது மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் பேச்சு

Print PDF

தினத்தந்தி            18.07.2013

கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 2வது மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் பேச்சு

கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி 2வது மண் டல கூட்டத்தில் தலைவர் ஜான் கூறினார்.

2வது மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல கூட்டம் தொட்டிபாளையத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடந் தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் ஜான் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் வாசுகுமார் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள பிரச் சினைகள் குறித்து கூறிய தாவது:

உண்ணாவிரதம்

பி.கே.முத்து (அ.தி.மு.க.): தீர்மானம் போட்ட எந்த பணியும் நடப்பதில்லை. காண்டிராக்டர்களிடம் கேட் டால் அலுவலகத்தில் செய்த வேலைக்கு பணம் தருவ தில்லை. நாங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்வது என்று கூறுகிறார்கள். அதே போல் வார்டு பிரிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட கெஜட் டின் படி புதிய பஸ் நிலையம் 2வது மண்டலத்துக்கு எனது வார்டுக்கு வரவேண்டும். ஆனால் முதல் மண்டலத்தின் செயல்பாட்டில் உள்ளது. இதனால் புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் மூலம் வரும் வரு மானம் நமக்கு வருவதில்லை. 2வது மண்டலத்துக்கு வரும் வருமானமே பாதிக்கப்படு கிறது. இந்த பிரச்சினையை தீர்க்காவிட்டால் உண்ணா விரத போராட்டம் செய் வேன்.

முருகசாமி (அ.தி.முக.): எனது வார்டில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைகள் எடுத்து பல நாட்கள் ஆகி விட்டது.

சபரீஸ்வரன் (அ.தி.மு.க.): கேத்தம்பாளையம் அரசு பள்ளியின் கட்டிடங்கள், கழிப் பிடங்கள் மோசமாக உள்ளது. ஏ.டி.காலனியில் வைரஸ் பர வாமல் இருக்க சாக்கடையை மறு சீரமைப்பு பண்ண வேண் டும். கங்கா நகர் பகுதியில் தார்சாலை அமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கி இன்னும் பணி ஆரம்பிக்கவில்லை.

குடிநீர் பிரச்சினை

கணேஷ் (அ.தி.மு.க.): இந்த வறட்சி காலத்தில் குடி நீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆனால் எனது வார்டில் தனியார் லாரிகள் மூலம் குடிநீர் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடை செய்ய வேண்டும். பெரிய வீடுகளில் உள்ளவர்கள் 4 இணைப்புக்கு மேல் பெற்றுள்ளார்கள். மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகிறார்கள்.

உமா மகேஸ்வரி(கம்யூ.): எனது வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள் ளது.

கலைவாணி ஜோதி (தி.மு.க.): வாவிபாளையம் பகுதி யில் பல இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தண்ணீர் வந்து 40 நாட்களாகிறது. 3வது திட்ட குடிநீர் சப்பை யாக உள்ளது. குடிநீர் வினி யோகிக்கும் ரங்கநாதன் வாத நோயால் தாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு உள்ளார். எனவே மற் றொருவரை நியமிக்க வேண் டும்.

அங்கன்வாடி கட்டிடம்

பாலன் (அ.தி.மு.க.): பி.என்.ரோடு அண்ணாநகரில் சாக்கடை கால்வாய் இது வரை தூர்வாரப்படவில்லை. காமராஜர் நகரில் அங் கன்வாடி கட்டிடம், கழிப்பிடம் கட் டப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வசதிகள் இல்லாததால் அவை திறக்கப்படாமல் உள் ளது.

விஜயகுமார் (அ.தி.மு.க.): அவினாசி நகரில் ரேஷன் கடையும், குருவாயூரப்பன் நகரில் சாக்கடை கால்வாயும் கட்டித்தர வேண்டும். தனி யார் செல்போன் நிறுவனத் தினர் எந்தவித அனுமதியும் பெறாமல் குழி தோண்டி ரோட்டை சேதப்படுத்தி வரு கிறார்கள். இவர்களை கட்டுப் படுத்த வேண்டும்.

ரங்கசாமி (அ.தி.மு.க.): எனது வார்டில் டெண்டர் விட்டு எடுத்த அனைத்து வேலையையும் செய்து தர வேண்டும். கணக்கம்பாளை யத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை ரோட்டின் நடுவே தடுப்பு கம்பி (சென்டர் மீடியன்) அமைத்து விபத்து களை தடுக்க வேண்டும்.

கனகராஜ் (அ.தி.மு.க.): கணேஷ் நகரில் எம்.எல்.ஏ.நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் செய்யப் படவில்லை.

இதற்கு பதில் அளித்து மண்டல தலைவர் ஜான் பேசியதாவது:

நடவடிக்கை எடுக்கப்படும்

காண்டிராக்டர்கள் எடுத்த பணிகளை உடனே முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கப்படும். குப்பை கள் அள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்படும். புதிய பஸ் நிலையம் 2வது மண்டலத் துக்கு கொண்டு வர மேயர், கமிஷனரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

கவுன்சிலர்கள் முழு ஒத் துழைப்பு தரும் பட்சத்தில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் செல்போன் நிறு வனத்தினர் கேபிள் பதிக்க அனுமதி வாங்கவில்லை. மீறி செய்தால் ஆட்கள் வேலை செய்யும் பொருட்களை பிடுங்கி தகவல் தெரிவிக்கலாம். கவுன்சிலர்கள் கூறிய வார்டு பிரச்சினைகள் அடுத்த கூட் டத்திற்குள் சரி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

16 முதல் 30 வார்டுகளில் 55 ஆயிரத்து 777 தனியார் கட் டிடங்கள் உள்ளது. இதில் 2602 கட்டிடங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. மீதியுள்ள கட்டிட உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு உடனே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி கொள்ள வேண்டும். மழைநீர் சேமிப்பு தொட்டி இல்லாத வீடுகளில் வரி போடமாட்டோம். குடிநீர் இணைப்பையும் துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது. இவ்வாறு தலைவர் ஜான் பேசினார்.

 

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி              17.07.2013

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேயரை நேரில் சந்தித்து குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

மாநகராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட சிதம்பரநகர், முத்துமணி நகர் பகுதி மக்கள் மேயரிடம் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி இல்லாமல் உள்ளது. ஒரு அடிபம்பு உள்ளது. அதில் மின் மோட்டார் வைத்து தரும்படி கடந்த 19.2.2013-ல் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர் அவர்கள்.

பாலபாக்யா நகர் மக்கள்:4-வது வார்டுக்கு உள்பட்ட தெற்கு பாலபாக்யா நகர் கிழக்கு 5-வது குறுக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் அளித்த மனு விவரம், 5-வது குறுக்குத் தெருவுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் போன்றவை சரியாக கிடைக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கிழக்கு 5-வது குறுக்கு தெருவின் பெயரை மற்ற அமைப்பினர் தன்னிச்சையாக மாற்றுவது ஏற்படையதல்ல. மேலும் தெருவின் பெயரை மாற்றினால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.

எனவே, எங்கள் தெருவை தொடர்ந்து கிழக்கு 5-வது குறுக்குத் தெரு என்றிருக்க அனுமதிக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் பூங்கா அமைத்து அதற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் எனவும், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பூங்காக்களை சென்னையில் உள்ள பூங்காக்களைப்போல அழகுபடுத்த வேண்டும் என, சண்முகசுப்பிரமணியன் என்பவர் மேயரிடம் மனு அளித்தார்.

நிகழ்ச்சியில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை மேயர் விஜிலா சத்தியானந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சியின் பணிநியமனக் குழு உறுப்பினர் மணிமாளிகை எம். கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், உதவும் கரங்கள் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்களுடன் மரக்கன்றுகள் வழங்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். உதவும் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகி இ. வைரவன் உடனிருந்தார்.

 

திமிரியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி அதிகாரி ஆய்வு

Print PDF

தினத்தந்தி              17.07.2013

திமிரியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி அதிகாரி ஆய்வு

திமிரி பேரூராட்சியில், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் உள்ள வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் கோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் திமிரி பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 


Page 143 of 506