Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க நகராட்சி வலியுறுத்தல்

Print PDF
தினகரன்      11.07.2013   

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க நகராட்சி வலியுறுத்தல்


வால்பாறை, : வால்பாறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழை, குளிர் என சீதோஷ்ண நிலை உள்ளதால் வயிற்று போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

அவற்றை தடுக்கவும், அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். உணவு விடுதிகள், டீக்கடைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரைத்தான் கொடுக்க வேண்டும். வியாபாரிகளும், பொதுமக்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளை விக்கும் பாலித்தீன் பைகளை தவிர்க்க வேண்டும். நகரில் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அமைக்கவேண்டும். இவ்வாறு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
 

ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைரோட்டோர இறைச்சி கடைகளில் ஆய்வு

Print PDF
தினமலர்      11.07.2013

ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைரோட்டோர இறைச்சி கடைகளில் ஆய்வு


சேலம்: சேலம் மாநகர பகுதியில் உள்ள ரோட்டோர இறைச்சி கடைகளில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில், இறைச்சி விற்பனை செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.சேலம் மாநகர பகுதியில், இறைச்சி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இறைச்சி கூடாரங்களில், முறையான ஆய்வுக்கு உட்படுத்தி அறுக்காமல், ரோட்டிலேயே, சுகாதாரமற்ற முறையில், ஆடுகளை அறுத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மீன், கோழி போன்ற இறைச்சி வகைகளும், விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் மாநகராட்சி கமிஷனர் அசோகன், "பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதாரமற்ற முறையிலும், இறைச்சி விற்பனை செய்யக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், நேற்று, மாநகர நல அலுவலர் (பொறுப்பு)மலர் விழி, மற்றும் மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள், கோரிமேடு, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ரோட்டோர கறிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அனைவரும் விதிமுறைக்கு புறம்பாக கறி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களை எச்சரிக்கை செய்து, விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.இதுகுறித்து மாநகர நல அலுவலர் மலர் விழி கூறியதாவது:சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்பவர்களிடம் இருந்து, இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.
 

சேலம் மாநகரில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரத்தில் இறைச்சி விற்ற 2 கடைகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி            11.07.2013

சேலம் மாநகரில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரத்தில் இறைச்சி விற்ற 2 கடைகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சேலம் மாநகரில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரத்தில் இறைச்சி விற்ற 2 கடைகள் அகற்றப்பட்டன. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இறைச்சி கடைகள்

சேலம் மாநகராட்சியில் சாலையோரங்களில் விற்கப்படும் ஆட்டு இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இந்த கடைகளால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்தது. இதையடுத்து சாலையோரங்களில் விற்கப்படும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, மாநகராட்சி நகர் நல அலுவலர்(பொறுப்பு) மலர்விழி, அஸ்தம்பட்டி பகுதி உதவி ஆணையாளர் பிரித்தீ மற்றும் அதிகாரிகள் நேற்று கோரிமேடு, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

2 கடைகள் அகற்றம்

அப்போது, பல கடைகளில் போதிய சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை விற்பது தெரியவந்து. மேலும் ஆடுகளை கடைகள் முன்பு வெட்டப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரிடம் இறைச்சி வெட்டுவதற்காக சேலம் குகை, வ.உ.சி. மார்க்கெட் அருகில், மணியனூர் ஆகிய இடங்களில் வதைக்கூடம் உள்ளது.

அங்கு சென்று தான் ஆடுகளை வெட்டி கொண்டு வர வேண்டும் என்று கூறி எச்சரிக்கை செய்தனர். சேலம் 5 ரோடு ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது சாலையோரத்தில் இருந்த 2 இறைச்சி கடைகள் முன்பு ஆடு வெட்டப்பட்டது கண்டறியப்பட்டது.

எச்சரிக்கை

அப்போது, சுகாதாரமற்ற முறையில் இருந்த 2 கடைகளையும் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து மாநகாராட்சி அதிகாரிகள் கூறும் போது, ‘மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை விற்கக்கூடாது.

நிரந்தர கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எனவே மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்பது கண்டறியப்பட்டால் அவைகளை அகற்றப்பட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 


Page 146 of 506