Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருநின்றவூரில் அனுமதியின்றி செயல்பட்ட மீன் கடைக்கு சீல் வைப்பு

Print PDF

தினத்தந்தி            11.07.2013

திருநின்றவூரில் அனுமதியின்றி செயல்பட்ட மீன் கடைக்கு சீல் வைப்பு

திருநின்றவூர் பேரூராட்சி 17– வது வார்டு கிருஷ்ணாபுரம் 2–வது குறுக்குத் தெருவில் தனியார் மீன் கடை ஒன்று கடந்த ஒரு வருடமாக முறையான அனுமதி பெறாமல் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்டு வந்தது. அத்துடன் மீன்களை கடை வெளியே வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியதோடு திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மீன் கடை நடத்தி வரும் அதன் உரிமையாளருக்கு முறையான அனுமதி பெற்று கடையை நடத்த பலமுறை நோட்டீசு கொடுத்தது.

இருப்பினும் தொடர்ந்து கடையை நடத்தி வந்ததால் இன்று காலை 10 மணிக்கு திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், இளநிலை உதவியாளர் சுதாகர், பதிவறை எழுத்தர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

 

'சென்னை மாந­க­ராட்­சியை கன்­டோன்மென்ட் பின்­பற்றும்'

Print PDF
தினமலர்              10.07.2013

'சென்னை மாந­க­ராட்­சியை கன்­டோன்மென்ட் பின்­பற்றும்'


சென்னை:"மாந­க­ராட்­சியில் நடை­பெறும் பல்­வேறு மேம்‌ பாட்டு திட்­டங்­களை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு, கன்­டோன்மென்ட் பகு­தி­யிலும் வளர்ச்சி பணிகள் மேற்­கொள்­ளப்­படும்," என, கன்­டோன்மென்ட் தலைமை நிர்­வாக அதி­காரி பிர­பாகர் கூறினார்.

பரங்­கி­மலை மற்றும் பல்­லா­வரம் கன்­டோன்மென்ட் கழ­கத்­திற்கு உட்­பட்ட பகு­தியில், ஏழு வார்­டுகள் உள்­ளன. இங்கு, ராணு­வத்­தினர் உட்­பட 40 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் வசிக்­கின்­றனர்.

இந்­தி­யாவில் உள்ள 62 கன்­டோன்­மென்ட்­டு­களில் சென்னை கன்­டோன்­மென்ட்டும் ஒன்று. இதில், முதல் முத­லாக ஆதார் அட்டை பெறு­வ­தற்­கான சிறப்பு முகாம், நாளை துவங்கி அடுத்த மாதம், 11ம் தேதி வரை நடக்­கி­றது. இது குறித்து, கன்­டோன்மென்ட் தலைமை நிர்­வாக அதி­காரி பிர­பாகர் கூறி­ய­தா­வது: ஆதார் அட்டை சிறப்பு முகாமில், கன்­டோன்மென்ட் பகு­தியில் உள்ள 5 வய­துக்கு மேற்­பட்ட அனை­வரும் கலந்து கொள்ள வேண்டும்.

சென்னை மாந­க­ராட்­சியில் நடை­பெறும் வளர்ச்சி திட்­டங்­களை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு, கன்­டோன்மென்ட் பகு­தி­யிலும் வளர்ச்சி பணிகள் மேற்­கொள்­ளப்­படும்.

ஆக்­கி­ர­மிப்­புகள் மீட்­கப்­பட்டு, விதி­முறை மீறி கட்­டப்­பட்ட கட்­ட­டங்கள் கண்­ட­றி­யப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும், தமி­ழக அரசு வழங்கும் நலத்­திட்­டங்கள், கன்­டோன்மென்ட் பகு­தி­வா­சி­க­ளுக்கு சென்­ற­டைய, அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும், இவ்‌வாறு அவர் கூறினார்.
Last Updated on Wednesday, 10 July 2013 11:55
 

சேலம் மாநகரில் சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்க தடை: மாநகராட்சி ஆணையாளர் அசோகன் உத்தரவு

Print PDF

தினத்தந்தி       10.07.2013

சேலம் மாநகரில் சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்க தடை: மாநகராட்சி ஆணையாளர் அசோகன் உத்தரவு


மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் ஆட்டு இறைச்சி கடைகள் செயல்படுகிறது. பொது மக்களுக்கு இடையூறாகவும், கடையில் விற்பனை செய்யப்படும் இறைச்சி சுகாதாரமின்றி உள்ளதாகவும் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சாலை ஒரங்களில் விடுமுறை நாட்களில் ஆட்டு இறைச்சி, மீன் போன்றவற்றை கடைகள் வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் எங்கும் சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்வதை தவிர்த்து விட்டு அவர்கள் நிரந்தர கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது சாலை ஒரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

 


Page 147 of 506