Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பாதைகள், கால்வாய்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு தங்கு தடையின்றி மழைநீர் சென்று ஏரி, குளங்களில் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Print PDF

தினமணி             03.07.2013

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பாதைகள், கால்வாய்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு தங்கு தடையின்றி மழைநீர் சென்று ஏரி, குளங்களில் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பாதைகள், கால்வாய்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு தங்கு தடையின்றி மழைநீர் சென்று ஏரி, குளங்களில் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி சார்பில் மழைக் காலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க அஸ்தம்பட்டி மண்டலத்தில் 4-ஆவது கோட்டம் மிட்டாபுதூர் பிரதான சாலை, 5-ஆவது கோட்டம் அழகாபுரம் பிரதான சாலை, 6-ஆவது கோட்டம் ராமசாமி நகர், 7-ஆவது கோட்டம் திருநகர், 8-ஆவது கோட்டம் பங்களா நகர், 12-ஆவது கோட்டம் கிழக்குத் தெரு 1 மற்றும் 2, 13-ஆவது கோட்டம் இட்டேரி  சாலை, 15-ஆவது கோட்டம் கிருபா மருத்துவமனை அருகில், 29-ஆவது கோட்டம் வெங்கட்டப்பன் சாலை, 30-ஆவது கோட்டம் கண்ணாரத் தெரு, 31-ஆவது கோட்டம் சன்னதி தெரு ஆகிய 11 கோட்டங்களில் கழிவுநீர் பாதைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணிகளை மேயர் எஸ்.சௌண்டப்பன், ஆணையர் மா.அசோகன், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் கே.மாதேஸ்வரன் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் போது உதவி ஆணையாளர் ஆர்.பிரித்தி, மாமன்ற உறுப்பினர்கள் கே.முருகன், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

ராசிபுரத்தில் மக்களை நோக்கி நகராட்சித் திட்டம்

Print PDF

தினமணி             03.07.2013

ராசிபுரத்தில் மக்களை நோக்கி நகராட்சித் திட்டம்

ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் "மக்களை நோக்கி நகராட்சி' என்றத் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தின் மூலம், பத்திரம் நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றை இணைத்து சொத்து வரி பெயர் மாற்றம்,  குடிநீர் கட்டண பெயர் மாற்றம்,  ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு சான்று வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிப்பது, நகரில் கட்டடம் கட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை சம்மந்தப்பட்ட இடத்திலேயே ஆய்வு செய்து, அன்றே தீர்வு காணப்பட்டு, பொதுமக்கள் விண்ணப்பித்த சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ராசிபுரம் நகராட்சியில் 7, 8-ஆவது வார்டுகளில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், அந்த வார்டு பொதுமக்கள் பெயர் மாற்றம், புதிய வீட்டு வரி ரசீது, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு கேட்டல் உள்ளிட்ட தேவைகளுக்கு மனு கொடுத்தனர். அப்போது, மனுதாரர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.

 இந்தத் திட்ட முகாமை, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். நகராட்சி ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகர்மன்ற உறுப்பினர் ஆர்.பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மக்களை நோக்கி நகராட்சிநிர்வாகம் திட்டம் துவக்கம்

Print PDF
தினமலர்                 03.07.2013

மக்களை நோக்கி நகராட்சிநிர்வாகம் திட்டம் துவக்கம்


ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி சார்பில், "மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சிக்கு உள்பட்ட, ஏழாவது மற்றும் எட்டாவது வார்டு மக்களுக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முகாம் நடந்தது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சேர்மன் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார். முகாமில், பத்திர நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றை இணைத்து, சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் கட்டண பெயர் மாற்றம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு சான்று வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்பட, 81 மனுக்கள் பெறப்பட்டது.

தகுதியான, 31 மனுக்களுக்கு அந்த இடத்திலேயே விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 153 of 506