Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை

Print PDF

தினமணி              02.07.2013

இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் உள்ள இறைச்சிக் கடைகளில் வெளிப்படையாக ஆடுகள், மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

 

கோவையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் நீதிமன்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி                02.07.2013 

கோவையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் நீதிமன்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

விளம்பர பலகைகள்

கோவை மாநகராட்சி பகுதியில் அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் ஆங்காங்கே அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் விளம்பர பலகை வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் குறிப்பிட்ட அளவு மற்றும் காலத்துக்கு மட்டுமே அனுமதி பெறப்படுகிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பெரிதாகவும், நீண்ட காலத்துக்கு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. ஒருசில விளம்பரங் களில் கண்கள் கூசும்படியான விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன.

திசை திருப்பும் செயல்

இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் செயலாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்றினாலும், மீண்டும் வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகின்றனர்.

எனவே அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் க.லதாவிடம் கேட்ட போது:–

அனுமதி பெற்று...

கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பலகைகளை வைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சியிடம் தடையில்லா சான்று வாங்கி விட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அங்கு அதற்கான கட்டணத்தை செலுத்தும்போது அனுமதி வழங்கப்படும். அதுவும் குறிப் பிட்ட நாளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். காலம் முடிந்ததும், விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அகற்றப்படாத விளம்பர பலகைகள் மற்றும், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டு ஒழிக்கப்படுகிறது. மேலும் ஒருசில அரசு சுவர்கள் மற்றும் தனியார் சுவர்க ளில் விளம்பரங்கள் பெயிண்டால் எழுதப்பட்டும், ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டும் உள்ளது. இது முற்றிலும் அரசு விதிகளுக்கு முரணான செயல் ஆகும்.

நீதிமன்ற நடவடிக்கை

எனவே மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்யக் கூடாது. அவ்வாறு விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர், கட்டிட உரிமையாளர், விளம்பரம் தயார் செய்யும் நிறுவ னங்கள் மீது மாநகராட்சி சட்டப்பிரிவின்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆணையாளர் லதா தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 03 July 2013 07:09
 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேயர் திடீர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி                02.07.2013 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேயர் திடீர் ஆய்வு

http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/kovaimayor.jpg

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றார். அவர் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், கட்டிட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறை ரோட்டுக்கு அருகில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதற்கு மாற்று இடம் தேர்வு செய்து ஆம்புலன்ஸ் எவ்வித இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் இடத்தை தேர்வு செய்யுமாறும் மருத்துவமனை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., ஆஸ்பத்திரி டீன் டாக்டர் விமலா, மண்டல தலைவர்கள் ஆதிநாரயணன், ராஜ்குமார், ஜெயராமன். நிதிக்குழு தலைவர் பிரபாகரன், நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Last Updated on Wednesday, 03 July 2013 07:09
 


Page 157 of 506