Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் அபராதம்'

Print PDF

தினமணி               21.06.2013

"குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் அபராதம்'

செங்கம் நகரில் குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.

செங்கம் நகர மக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதற்கான தொட்டிகளில் கொட்ட வேண்டும். பொது இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. உணவகம், இறைச்சிக்கடை, திருமண மண்டபக் கழிவுகளை ஏரி, குளம், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொட்டக் கூடாது. மீறி கொட்டும் கடை உரிமையாளர் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்க வேண்டுகோள்

Print PDF

தினமணி               21.06.2013

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்க வேண்டுகோள்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்குமாறும், இதுவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காதவர்கள் உடனடியாக அமைக்குமாறும் ஆணையர் ஜானகி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு: மாநகராட்சியின் 4 மண்டலங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு குறித்த களப்பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 நாள்களில் 6,592 கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 3,810 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. 2,782 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தும் நல்ல நிலையில் இல்லாதவை 2,286 என கண்டறியப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டும், அவற்றை பராமரிக்காதவர்கள் செப்பனிடும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதுவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காதவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக ஆணையர்

Print PDF

தினமணி               21.06.2013

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக ஆணையர்

நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

  பூ மார்க்கெட்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த அவர், உணவு மற்றும் குடிநீர் தரமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அனைத்து அம்மா உணவகங்களிலும் ஈக்களைக் கவரும் இயந்திரம் அமைக்குமாறும், டியூப் லைட்களுக்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்துமாறும் அறிவுறுத்தினார்.

  கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கில் பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்தை அவர் பார்வையிட்டார். அதன் பின்னர், மேட்டுப்பாளையம் சாலையில் 158 கி.மீ. தூரத்துக்கு சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணியைப் பார்வையிட்டார்.

உக்கடம் லாரிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.

பேரூர்- செல்வபுரம் சாலையில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாக ஆணையர், பகல் நேரங்களில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் அதிக ஆட்களைக் கொண்டு பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

  பிறகு, மாநகராட்சி அலுவலகத்தில் கோவை மேயர் செ.ம.வேலுசாமியுடன், மாநகரில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார், கண்காணிப்புப்  பொறியாளர் கணேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 166 of 506