Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வீடுகள்தோறும் விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினமணி               21.06.2013

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வீடுகள்தோறும் விழிப்புணர்வு பிரசாரம்

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வீடுகள்தோறும் வரும் திங்கள்கிழமைமுதல் (ஜூன் 24) விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையின் 200 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்பணிகளுக்காக குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த 2200 ஊழியர்கள் ஈடுபத்தப்பட உள்ளனர்.

மழைநீர் சேகரிப்பை அதிகரிக்கவும், அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையைப் பொருத்தவரை குடிநீர் வாரியப் பகுதி பொறியாளர்கள் மேற்பார்வையில் மண்டலம்தோறும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு பிரசாரம் மேற்கொள்ளும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:

வீடுகளில் உள்ள மழைநீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை முறையாகப் பராமரிப்பது குறித்து பொதுமக்களிடம் குடிநீர் வாரிய ஊழியர்கள் அறிவுறுத்த உள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு குறித்த வரைபடங்கள் வீடுகள்தோறும் வழங்கப்படும். சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 2200 ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரப் பணிகளில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இடைப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீர் பணிகளை தலைவர், ஆணையாளர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி             20.06.2013 

இடைப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீர் பணிகளை தலைவர், ஆணையாளர் ஆய்வு

இடைப்பாடி நகராட்சிக்கு என தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 20-வது வார்டு பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் சாயம் கலந்த குடிநீர் வந்தது. இது குறித்து ஆணையாளர் புகழேந்தி, நகரமன்ற தலைவர் கதிரேசன் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து ஆணையாளர் புகழேந்தி கூறும்போது, இடைப்பாடி நகராட்சி பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய குடிநீர் குழாய் நிறைய சேதமடைகிறது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக தெரிவித்தால் அதனை உடனே சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தடைசெய்த பிளாஸ்டிக் பை விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

Print PDF

தினகரன்              19.06.2013  

தடைசெய்த பிளாஸ்டிக் பை விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

கோபி, : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கோபி வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 தமிழகத்தில் 40 மைக்ரான் அளவிற்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார துறை அதிகாரிகள், நககாட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர்கள்,பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துப்படுகிறதா என்பது குறித்து வணிக நிறுவனங்கள், கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 அதே போன்று கோபி நகராட்சியிலும் நகராட்சி ஆணையாளர் ஜான்சன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக கோபி நகராட்சி பகுதி முழுவதும் நடத்திய  சோதனையில் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. நகரின் அருகே உள்ள கிராம பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் ஜான்சன், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், சையத்காதர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மொடச்சூர், பச்சமலை ரோடு, நாய்க்கன்காடு,ஜோதிநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் 14 கடைகளில் சுமார் 200 கிலோ அளவிற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு 2400 ரூபாய் அபராதம் விதித்தனர்.
 


Page 167 of 506