Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி               19.06.2013

அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை


கோவை மாநகராட்சி கமிஷனர் ஜி.லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொது சுகாதாரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சுகாதாரமற்ற முறையில் மாநகராட்சி அனுமதி பெறாமல் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.

 இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. ஆகவே அனுமதி இல்லாமலும், மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ளலாம். பொது இடங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுவதுடன் இந்த உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது மாநகராட்சியால் சட்டப்படி தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கட்டட உரிமங்களுக்கு கூடுதல் கட்டணம்

Print PDF

தினமணி               19.06.2013

கட்டட உரிமங்களுக்கு கூடுதல் கட்டணம்

கோவை மாநகராட்சிப் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கான உரிமக் கட்டணங்களை உயர்த்துவதற்கு மாமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மாநகராட்சி நகரமைப்புப் பிரிவின் சார்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதி உரிமக் கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்தக் கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் மாநகராட்சியின் வருவாய் நிலை மற்றும் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்ட நிபந்தனைப்படி உரிமக் கட்டணத்தைக் கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

குடியிருப்புகள், வணிகக் கட்டடம் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் இப்போதுள்ள உரிமக் கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப உயர்த்த உத்தேசித்துள்ள கட்டணத்தைக் குடியிருப்புகளுக்கு மட்டும் குறைத்து வசூலிக்க கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

கட்டட அனுமதிக் காலம் 2 ஆண்டுகளுக்குப் பதிலாக 3 ஆண்டுகள் என வழங்கப்படும்.

சேவைக் குடியிருப்புகள், மேன்ஷன்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: கோவை மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் அதிக அளவில் குடியிருப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமிடங்களில் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும். மழை நீர் சேகரிப்புத் திட்டமும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதியளிக்கப்படும். தனி வீடுகளுக்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்ட உரிமக் கட்டணம் குறைத்து வசூலிக்கப்படும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

சிறப்புத் தீர்மானங்கள்: கோவை மாநகராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக 424 துப்புரவுப் பணியாளர்களை நியமித்துக் கொள்வதற்கான தீர்மானத்தை வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் கொண்டு வந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளையும் பூங்காக்களையும் மாநகராட்சியே பராமரிப்புச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் வெண்தாமரை பாலு கொண்டு வந்தார். இத்தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

பாதாள சாக்கடை பணி: துரிதமாக முடிக்க மேயர் அறிவுரை

Print PDF

தினமணி               19.06.2013

பாதாள சாக்கடை பணி: துரிதமாக முடிக்க மேயர் அறிவுரை

மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை மேயர் சைதை துரைசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மாதவரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும் மேயர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, சீனிவாசா நகர், திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்தப் பணிகள் மெதுவாக நடப்பதால் சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகின்றன என்று பொதுமக்கள் கூறியதையடுத்து, இந்தப் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளை மேயர் அறிவுறுத்தினார்.

பின்னர் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அமைச்சரும், மேயரும் அதிகாரிளுக்கு உத்தரவிட்டனர்.

 


Page 168 of 506