Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாங்காடில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பேரூராட்சி அதிகாரி தகவல்

Print PDF

தினத்தந்தி              14.06.2013

மாங்காடில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பேரூராட்சி அதிகாரி தகவல்

மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தனர். அப்போது மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து கோஷங்கள் எழுப்பியதுடன், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன் கூறும்போது, ‘‘மாங்காடு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி இல்லாவிட்டால் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். வருகிற 20–ந் தேதிக்குள் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டிடங்களில் பேரூராட்சி சார்பில் கட்டமைப்பு வசதி செய்து முடிக்கப்பட்டு அதற்கான தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்’’ என்றார்.

பேரணியில் பேரூராட்சி துணைத்தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

மெரினாவில் கடைகள் அமைக்க விதிமுறை ஐகோர்ட்டில் தாக்கல்

Print PDF

தினபூமி             14.06.2013

மெரினாவில் கடைகள் அமைக்க விதிமுறை ஐகோர்ட்டில் தாக்கல்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Chennai%20High%20court1_26.jpg
 
சென்னை, ஜூன்.14 - சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சென்னையை சேர்ந்த காந்தி ஜி பொது மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலக புகழ்பெற்ற முக்கிய இடமாகும். இந்த புகழ்மிக்க கடற்கரையில் தன்னிச்சையாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த கடைகளில் அழகு சாதன பொருட்கள், சுட வைத்து உண்ணுகின்ற உணவு வகை கடைகள் சில பொழுது போக்கு கடைகள் அன்றாடம் நடைபெற்று வருகிறது. சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடும் இடமாக உள்ளது இந்த கடைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யபடவில்லை இதனால் புகழ்மிக்க  கடற்கரை மாசுக்கு உட்படுகிறது. ஆகவே மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்சு இந்த மனுவுக்கு என்ன பதில் தெரிவிக்க போகிறீர்கள்? என்று சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி அந்த அறிக்கையை. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கறையில் இயக்கும் கடைகளுக்கு விதிமுறைகளை வகுத்து தமிழக அரசிடம் ஆலோசித்து இருந்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கறோம் என தெரிவித்தனர்.

அதன் படி நேற்று மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதன் விதிமுறை வரைவு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் தெரிவித்ததாவது சென்னை மெரினா கடற்கரை சுமார் 3.48 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டது உலகிலேயே மூன்றாவது பெரிய புகழ்மிக்க கடற்கரையாகும்.

தினந்தோறும் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் ஒன்றாக கூடுகின்ற இடமாகும். இது வரை சுமார் 1489 கடைகள் அமைத்து சுடச்செய்து உண்ணுகின்ற உணவைவிற்கும்  வியாபாரிகள் அழகு சாதன பொருட்களை விற்க்கும் வியாபாரிகள் பொழுது போக்கு பொருட்களை விற்கும் கடைகாரர்கள், பொழுது போக்கு சாதனங்களை வைத்து விளையாட்டு காட்டி கடை நடத்தும் வியாபாரிகள் மெரினா கடற்கரை மண்ணிலே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் குப்பை கழிவுகள் அதிக அளவில் சேர்கின்றன. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க ஒழுங்குமுறைபடுத்தி கட்டுபடுத்த கடைகளில் அமைப்பை மாற்றியமைக்க மாநகராட்சி சில விதிமுறைகள் வகுத்துள்ளது.

அவைகள் வருமாறு:-

  • கடைகளை தற்போது இருக்கின்ற இடத்தில் இருந்து சற்று அப்புறப்படுத்தப்படும்.
  • மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை பின்பக்கத்தில் இந்த கடைகளை மாற்றப்படும்.
  • வியாபாரிகள் அமைக்கின்ற கடைகள் நிரந்தர கடைகளாக இருக்க கூடாது. நடமாடும் கடைகளாகவும், உடனே பிரிக்கின்ற வகையில் அமைக்க வேண்டும்.
  • காந்தி சிலை பின்பக்கம் சுமார் 200 மிட்டர் தொலைவில் 540 கடைகள் 6 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
  • உழைப்பாளர் சிலை பின்பக்கம் சுமார் 5 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
  • வியாபாரிகள் அனைவருக்கும் புகைப்பட அடையாள சென்னை மாநகராட்சி வழங்கும்.
  • உழைப்பாளர் மற்றும் காந்தி சிலை நுழைவு செக்போஸ்ட் கேட் அமைத்து புகைப்பட அடையாள அட்டையை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படும்.
  • பொதுமக்களுக்கு, கடைகாரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
  • அனைத்து கடைகள் நெடுகிலும் குப்பை தொட்டிகள் அமைத்து மாநகராட்சி அதை அப்புறபடுத்தும். இந்த கடைகளும் பராமரிப்புக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
  • இந்த நடவடிக்கை அனைத்தும் கடற்கரை சுத்தத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.

இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைய்தது. மாநகராட்சியின் விதிமுறைகளை எப்பொழுது செய்லபடுத்தப்படும் என்பது குறித்து 1 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்

 

ஈரோட்டில்அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு

Print PDF

தினபூமி             14.06.2013

ஈரோட்டில்அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini1(C)_21.jpg

ஈரோடு, ஜூன்.14 - ஈரோட்டு மாநகராட்சியில் கடந்த வாரம் கொல்லம் பாளையம், ஆர் .என் புதூர், பார்க் ரோடு உள்பட 10 இடங்களில்  அம்மா  உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் முலம் திறந்து வைத்தார். பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த அம்மா உணவங்களில்  தினமும் 1000 கணக்கனோர் பசியாறி   முதல்வரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம்  ஈரோட்டில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள  அம்மா  உணவகத்தில் அமைச்சர் கே.வி .ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

 இதேபோல் நேற்று  காலை ஈரோடு காந்திஜீ ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்மா  உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின் அவர் அங்குள்ள அரிசி,காய்கறி பிரிவுக்கு சென்று அவைகள் தரமானதாக உள்ளதாக,சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.மேலும் அங்குள்ள சமையல் அறைகளை சுத்தமாக வைத்துகொள்ள ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின் அவர் கூறுகையில் அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவு வகைகள் தரமானதாகவும் சுவையானதாகவும் உள்ளது என கூறினார் .அமைச்சர் ஆய்வின் போது மண்டல தலைவர்கள் மனோகரன், மாநகராட்சி கமிஷனர் விஜலட்சுமி உடன் இருந்தனர்.

 


Page 173 of 506