Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF
தினமணி       05.06.2013

குடிநீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடியாத்தம் நகரில் வீட்டுக் குழாய்களில் பொருத்தி, குடிநீர் உறிஞ்சியதாக 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி தலைமையில் குழாய் ஆய்வாளர் சேகர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 29, 30-வது வார்டுகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
 

அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி       05.06.2013

அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு

மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் திருப்பூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

திருப்பூரில் வளர்மதி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியின் தரத்தை ஆட்சியர் ஆய்வு செய்து, அரிசி இருப்பு, விற்பனை குறித்து கேட்டறிந்தார்.அதன் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் ரேஷன் பொருள்கள் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, தென்னம்பாளையம் வாரச்சந்தை அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக துவங்கப்பட்ட மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அதன்பின், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாமில் ஆட்சியர் பங்கேற்றார். இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தாராபுரம் மானூர்பாளையத்தில் நடந்த "அம்மா' திட்ட முகாமிலும் பங்கேற்று, சாதிச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை ஆட்சியர்  வழங்கினார் .

இதில், எம்எல்ஏ கே.பி.பரமசிவம் (பல்லடம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம், குண்டடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கவேல், வட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியம், நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

விதிமீறல்: வணிக வளாக கட்டடத்துக்கு "சீல்'

Print PDF
தினமணி       05.06.2013

விதிமீறல்: வணிக வளாக கட்டடத்துக்கு "சீல்'


மதுரையில் விதிகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட பரப்பளவைக் காட்டிலும்  கூடுதல் இடத்தில் கட்டப்பட்ட 3 மாடி தனியார் வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.

மதுரை ராஜா மில் சாலையில் வி.பாலமுருகன், வி.மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தரை கீழ்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 2,981 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், அனுமதி பெறப்பட்ட பரப்பளவை விட பலமடங்கு கூடுதல் பரப்பளவில், அதாவது 6,480 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் மற்றும் 3-ம் தளங்கள் வரை கட்டடம் கட்டப்பட்டது.

அத்துடன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மதில் சுவரிலிருந்து 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, 12 மீட்டர் உயரம் வரை இந்த கட்டடத்தை கட்டியுள்ளனராம்.

தரை கீழ் தளத்தில் வாகனம் நிறுத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, பண்டக சாலையாக மாற்றி வணிக உபயோகத்திற்காகவும் கட்டடப்பட்டுள்ளது.  இது தொடர்பான புகாரின்பேரில், இக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை  ஆணையர் ஆர். நந்தகோபால் தலைமையில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்கண்ட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டு, கட்டடத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது.
 


Page 183 of 506