Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சியில் குழந்தை பெயர் பதிவு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்

Print PDF
தினமலர்         29.05.2013

நகராட்சியில் குழந்தை பெயர் பதிவு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்


நாமக்கல்: நாமக்கல் நகாட்சி அலுவலகத்தில், குழந்தை பெயர் பதிவு செய்தல் மற்றும் பிறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

நகராட்சி சேர்மன் கரிகாலன், கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், தலைமை வகித்தார், பிறப்பு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வர் பிறப்பு சான்றிதழ் வழங்கி வரும் நிலையில், பெயர் விடுபட்டவர்களை கண்டறிந்து பெயர் பதிவு செய்ய, இரண்டு நாள் சிறப்பு முகாம் நடந்த சுகாத்தாரத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இப்பிரச்னை இல்லை. இந்நிலையில், பொய்யான காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் பெயரை பதிவு செய்ய பெற்றோர்கள் முன் வரவேண்டும். அதிகாரிகள், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த, 2009ம் ஆண்டு முதல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், 20 ஆயிரம் பேரில், பத்தாயிரம் குழந்தைகளுக்கு சான்றிதழ் இல்லை. அரசின் திட்டங்களை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்வதற்கு பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 2014க்கு பின், இந்த வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. ஆகவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றம்

Print PDF
தினமலர்                29.05.2013

பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றம்


பொதட்டூர்பேட்டை : பேரூராட்சி இயக்குனர் தலைமை அலுவலகம் கட்டுவதற்கு, பேரூராட்சிகளின் நிலைகளுக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து, அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிப்பட்டு அடுத்த, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், தலைவர் தண்டபாணி தலைமையில், அவசர கூட்டம் நடந்தது.

இதில், தற்போது சென்னை குறளகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலகம், திருவல்லிக்கேணி வட்டம், மைலாப்பூரில் புதிதாக அரசுக்கு சொந்தமான கட்டடம் கட்ட தேவைப்படும் நிதியை, அந்தந்த பேரூராட்சிகளின் நிதி நிலைகளுக்கு ஏற்ப, பொது நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், துணைத் தலைவர் ரவி, வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
 

நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடம்: மேயர் ஆய்வு

Print PDF

தினபூமி               29.05.2013

நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடம்: மேயர் ஆய்வு

http://www.thinaboomi.com/sites/default/files/Saidai-Duraisamy1_0.jpg

சென்னை, மே. 29 - சென்னை 141 வது வார்டில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான இடத்தினை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பொது மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்ற தெரு நாய்கள், பராமரிப்பின்றியும், வசிப்பிடமின்றியும், வயதான நோய் தொற்றுள்ள தெரு நாய்களுக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதே போல் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்த பின்பு அவைகளை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செல்லப் பிராணிகளுக்கான மாயான பூமி அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக கண்ணம்மாபேட்டை மயானபூமி பின்புறத்தில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கும், அதன் அருகே செல்லப் பிராணிகளுக்கான மயான பூமி அமைப்பதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நாய்கள் சரணாலயத்தில் சுமார் 2 ஆயிரம் வசிப்பிடமற்ற வயதான மற்றும் நோயுற்ற தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணவு வழங்கி பராமரிக்கப்படும். நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கான பணியினை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி முதன்மை செயலாளர் ஆணையாளர் விக்ரம் கபூர், துணை ஆணையர்(சுகாதாரம்) டாக்டர் சி.என். மகேஸ்வரன், வட்டார துணை ஆணையர் பி. மகேஸ்வரி, மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தம், மண்டல குழு தலைவர் எல்.ஐ.சி. மாணிக்கம், மன்ற உறுப்பினர் ஆர். சி. ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 189 of 506