Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தில்லி மாநகராட்சிகளின் ஃபேஸ்புக் மூடல்: மக்கள் குறை கேட்க கால் சென்டர்கள்

Print PDF
தினமணி        29.05.2013

தில்லி மாநகராட்சிகளின் ஃபேஸ்புக் மூடல்: மக்கள் குறை கேட்க கால் சென்டர்கள்


ஃபேஸ்புக் என்று அழைக்கப்படும் சமூக வலைத்தளம் வழியாக மக்களின் குறைகளைக் கேட்டுப் பதில் அளித்துவந்த தில்லியின் மூன்று நகராட்சிகளும் தற்போது அதில் பதில் அளிப்பதை நிறுத்திவிட்டன.

ஃபேஸ்புக்கை மூடிவிட்டு கால் சென்டர் வசதியைத் தொடங்கியுள்ள கிழக்கு மாநகராட்சியைப் போல, வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளும் கால் சென்டர் தொடங்க திட்டமிட்டு வருகின்றன.

தலைநகரில் மாநகராட்சிகளின் டி.இ.எம்.எஸ். கமிட்டிகள் ஃபேஸ்புக்கை உருவாக்கி பராமரித்து வந்தன.

துப்புரவு தொடர்பான பணிகள், பென்ஷன் தகவல்கள், உள்ளாட்சித் துறை இயக்குநரின் அறிக்கைகள், சொத்து வரி முதலான அறிவிப்புகள் இந்த சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தன. பொதுமக்களின் புகார்களையும் மாநகராட்சிகள் பெற்றுவந்தன.

ஃபேஸ்புக் மக்களைச் சென்றடையவில்லை என்றும் அதற்கு பதிலாக கால் சென்டர் தொடங்க இருப்பதாகவும் தில்லி மாநகராட்சிகள் தெரிவிக்கின்றன.

 "ஃபேஸ்புக்கில் சுற்றறிக்கைகளை வெளியிட்டபோது அதற்குப் போதிய வரவேற்பு இல்லை.  ஒவ்வொருவருக்கும் கணினி வசதி இருப்பதில்லை. அதனால், எங்கள் கருத்துகள் மக்களைச் சென்றடையவில்லை.

ஃபேஸ்புக்கை விட கால் சென்டர் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் கால் சென்டரை தொடக்கி குறைகளைக் கேட்டு வருகிறது'' என்று வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரி வி.பி. பாண்டே தெரிவித்தார்.

கவுன்சிலர்கள் எதிர்ப்பு: ஆனால் ஃபேஸ்புக் மூடப்பட்டதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். "ஃபேஸ்புக் மூலம் மக்கள் நிறைய புகார்கள் அனுப்பி வந்தனர்.

என்னுடைய பகுதியில் வசிப்போர் அடிக்கடி புகார்கள் தெரிவித்துவந்தனர். அதனால் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது' என்றார் ஆண்ட்ரு கன்ஞ் பகுதி கவுன்சிலர் அபிஷேக் தத்.

"ஃபேஸ்புக் பக்கங்களைப் பராமரிக்க போதுமான வசதிகள் இல்லை. போதிய ஊழியர்கள் இல்லாததால் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை' என்கிறார் தெற்கு தில்லி மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் முகேஷ் யாதவ்.
 

மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மேயர்

Print PDF
தினமணி        29.05.2013

மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மேயர்


மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா கேட்டுக் கொண்டார்.

 94 ஆவது வார்டு, அவனியாபுரம் பகுதியில் அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா திட்டம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு சுகாதாரக் குழுத் தலைவர் எஸ்.முனியாண்டி தலைமை வகித்தார்.

 நிகழ்ச்சியில், மேயர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது:  மதுரையில் ரூ.200 கோடியில் 3 மேம்பாலங்கள், ரூ. 100 கோடியில் தமிழன்னை சிலை, தோப்பூர் பகுதியில் துணை நகரம் உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மாநகராட்சி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது என்றார்.  நிகழ்ச்சியில் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ. 6.25 லட்சம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 18 புதிய பயனாளிகள்  தேர்வு செய்யப்பட்டனர்.

 ஆணையர் நந்தகோபால், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, உதவி ஆணையர்  தேவதாஸ், கவுன்சிலர்கள் காசிராமன், சக்திவேல்,உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

மாநகராட்சியில் பணி முதிர்வு பட்டியல் வெளியீடு

Print PDF
தினமணி                  29.05.2013

மாநகராட்சியில் பணி முதிர்வு பட்டியல் வெளியீடு


மதுரை மாநகராட்சியில் பொறியியல் பிரிவில்   பொறியாளர்களுக்கான உத்தேச பணி முதிர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பு நிலையில் உள்ள பொறியாளர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்கும் வகையில் இ ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் கூறியது:

மாநகராட்சி பொறியியல் பிரிவில்   செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், இளநிலைப் பொறியாளர், உதவிப்பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றுவோரின் 2013-14-ம் ஆண்டிற்கான உத்தேச பணி முதிர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், அரசாணைப்படி தேர்ச்சி திறனற்ற பணியாளர் சாலமன் ஜெயபிரபு என்பவரை, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தில் பணி வழங்க பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு தேர்ச்சி திறனற்ற பணியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு உரிய சுழற்சி முறை பின்பற்றப்பட்டு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, 2001-ல் புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவிப்பொறியாளர்களின் வகுப்புவாரி சுழற்சி முறை விதிமுறைகளின்படி, பின்பற்றப்படாமல் உதவிப்பொறியாளர் எஸ்.அரசு என்பவரின் பணி முதிர்வு தவறுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு உதவிப்பொறியாளராக பணியில் சேர்ந்த நாள் படியும், விதிமுறைகளின் படியும் சுழற்சிமுறை பின்பற்றப்பட்டு முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில், இந்திராதேவி என்பவருக்கு பணி விதிகளின்படி உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலும், நகரமைப்பு பிரிவு பொது பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாலும், அவரது பணிமூப்பு மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மூலம் செயற்பொறியாளராக ஏ.மதுரம், உதவி செயற்பொறியாளர்களாக(வேலைகள்) எஸ்.சந்திரசேகரன், எஸ்.எம். ராசேந்திரன், நேரடி நியமனம் மூலம் உதவிப்பொறியாளர்களாக (வேலைகள்) எம். முனீர்அகமது, எம். காமராஜ்,  எஸ். குழந்தைவேலு, ஆர். கனி, சுரேஷ்குமார், மல்லிகா, பாலமுருகன், ஆரோக்கியசேவியர், ஆர். அலெக்சாண்டர், எம்.பி. மனோகரன், மயிலேறிநாதன், ஜெயா, ஆறுமுகம், கே. சுபா, ஏ. அமர்தீப், லோகேஸ்பிரவு, பதவி உயர்வு மூலம் எஸ்.அரசு, சுப்பிரமணியன் ஆகியோரை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு மூலம் திருஞானசம்பந்தம், பாலையா, இந்திராதேவி, எஸ்.சேகர், முருகேச பாண்டியன், பாஸ்கரன், ஷர்புதீன், துர்காதேவி, முருகன் ஆகியோரும், தொழில்நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு மூலம் சரஸ்வதி, தேபர் ராசசேகரன், கே.சோனை, பாபு, மணி, தியாகராசன், நேரடி நியமனம் மூலம் சாலமன் ஜெயபிரபு,  ஜேஎன்யுஆர்எம் பிரிவில் பதவி உயர்வு மூலம் வி.எஸ். மணியன், விஜயகுமார், ஜாகீர்உசேன், சூசை ஆரோக்கியசாமி, அருள்சகாயசேவியர், பெரியசாமி, சந்தானம், வரைவு அலுவலர்களாக கருப்பையா, சோலைமலை, முத்துராமலிங்கம், சரவணன் ஆகியோரை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 இந்தப் பட்டியல் தொடர்பாக, பணியாளர்களின் ஆட்சேபணைகள் குறித்து பரிசீலனை செய்து, இறுதிப்பணி முதிர்வு பட்டியல் வெளியிடப்படும், என தெரிவித்தார்.
 


Page 191 of 506