Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நிறுத்தம் கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி          28.05.2013

கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நிறுத்தம் கலெக்டர் அதிரடி நடவடிக்கை


கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் சாலையை அகலப்படுத்துவதற்காக நடைபெற்ற காங்கிரீட் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தர விட்டார்.

சாலை சீரமைக்கும் பணி

கீழ்குந்தா பேரூராட்சியின் 9-வது வார்டுக்குட்பட்ட தூனேரி, கொட்ரா கண்டி, மட்டக்கண்டி கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கிறார்கள். இப்பகுதி மக்களின் வசிதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்ரா கண்டி கிரா மம் முதல் மட்டகண்டி கிரா மம் வரை தார்சாலை அமைக் கப்பட்டது. தற்போது இந்த சாலைகள் மிகவும் பழுத டைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து, இந்த சாலையை சீரமைக்க அப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மலைப் பகுதி மேம்பாட்டு நிதியி¢ன் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் முதற் கட்டமாக சாலை அகலப்படுத்தும்பணிக் காக காங்கிரீட் அமைக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது.

பொதுமக்கள் புகார்

இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தார் சாலை அமைக்கும் பணி தர மற்று இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் கூறினர்.

இதனை தொடர்ந்து கீழ் குந்தா பேரூராட்சி துணை தலைவர் போஜன், 9-வது வார்டு கவுன்சிலர் சரவணன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சாலை அகலப் படுத்தும் பணிக்காக அமைக் கப்பட்டு இருந்த காங்கிரீட்டு கள் தரமற்று இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சான பட்நாயக்கிற்கு கீழ்குந்தா பேரூ ராட்சி துணை தலைவர் போஜன் புகார் கொடுத்தார். இதையடுத்து, தரமில்லாமல் அமைக்கப்பட்டு வரும் காங் கிரீட் நடைபாதை களை தற் காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் உத்தர விட்டார்.
 

அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF
தினமணி        28.05.2013

அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்


தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

"குர்கான் எல்லையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்  பலகைகள் அகற்றப்பட்டன. அந்த விளம்பரங்களை வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15 நாள்களில், அனுமதி பெறாமல் 50 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன' என்று தெற்கு தில்லி மாநகராட்சி துணை ஆணையர் (விளம்பரம்) சுஷீல் குமார் சிங் கூறினார்.
 

பாதாளச் சாக்கடைப் பணி: ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி        28.05.2013

பாதாளச் சாக்கடைப் பணி: ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் ரூ. 76.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆட்சியர் எஸ். நாகராஜன் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில், மேலராமன்புதூர் அசோக் அவென்யூ, சைமன்நகர் சாலைப் பகுதியில் நடைபெறும் இப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது,

நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் மக்களின் சுகாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் விஞ்ஞானரீதியாக கழிவுநீரை அப்புறப்படுத்த பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு முதல்வரால் அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக நகராட்சியின் 41 வார்டுகளுக்கு இத் திட்டம் செயல்படுத்த ரூ. 76.04 கோடியும், ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ. 1.90 கோடிக்கும்  நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இத் திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளைத் தரமான முறையில், குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சிவதாணு செட்டியார், உதவி செயற்பொறியாளர் பழனி, நகராட்சி நகர்நல அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 


Page 192 of 506