Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பிறப்பு–இறப்பு சான்றிதழ்களுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி        26.05.2013

பிறப்பு–இறப்பு சான்றிதழ்களுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்


மதுரை மாநகராட்சியில் பிறப்பு–இறப்பு தொடர்பான சான்றிதழ்கள் பெறுவதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என கமிஷனர் நந்தகோபால் கூறியுள்ளார்.

பிறப்பு–இறப்பு சான்றிதழ்

மதுரை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கேட்டு நாள்தோறும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் 50–க்கும் மேற்பட்டவை சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாமலும், தாய்–தந்தை பெயர் மாற்றம், குழந்தையின் பிறந்த தேதியில் மாறுபாடு போன்ற காரணங்களால் பிறப்பு சான்றிதழ் அளிக்க முடியாதநிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள் சுகாதார ஆய்வாளரின் கையொப்பத்துடன் உடனுக்குடன் அன்றைய தினம் மாலையிலேயே வழங்கப்படுகின்றன. எச்சரிக்கை

மேலும் பிறப்பு சான்றுகளை உடனுக்குடன் வழங்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெய வரும் பொதுமக்கள் தாங்களாகவே மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தகவல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாகவே கொடுக்கலாம்.

இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். அதையும் மீறி இடைத்தரகர்கள் உங்களை வற்புறுத்தினால் உடனடியாக புகார் செய்யலாம். புகாரின்பேரில் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

பணியில் இருக்கும் போது "பார்வை இழப்பு ஏற்பட்டால், பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது" நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF
தினத்தந்தி        25.05.2013

பணியில் இருக்கும் போது "பார்வை இழப்பு ஏற்பட்டால், பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது" நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு


பணியில் இருக்கும் போது பார்வை இழப்பு ஏற்பட்டால் பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது என்று நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி அலுவலர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கருங்காட்டான்குளத்தைத சேர்ந்தவர் வி.போஸ்(வயது 52). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:–

சின்னமனூர் நகராட்சியில் 1994–ம் ஆண்டு வருவாய் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். அதன்பின்பு 1995–ம் ஆண்டு நடந்த துறை ரீதியான தேர்வில் வெற்றி பெற்றேன். இதனால் 2000–ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பணியில் இருக்கும் போது எனக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனால் எனக்கு 1995–ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய பதவி உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை. எனக்கு, பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மாற்றுப்பணி


இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.சாமித்துரை, எம்.ஞானகுருநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

சின்னமனுர் நகராட்சி ஆணையாளர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரருக்கு 100 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டதால் அரசு பணிக்கு தகுதி அற்றவர். எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்க முடியாது“ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

அரசு பணியில் சேர்ந்த பின்பு மனுதாரருக்கு 100 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது உடல் ஊனம் ஏற்பட்டால் அவரது உடல்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றுப் பணி வழங்க வேண்டும். அவ்வாறு மாற்றுப்பணி வழங்கும் போது அவர் ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தை குறைக்கக்கூடாது.

பதவி உயர்வு மறுத்தது தவறு

அதே போன்று அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை மறுக்கக்கூடாது. இது உடல் ஊனமுற்றோர் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும் போது மனுதாரருக்கு பதவி உயர்வு அளிக்க மறுத்தது தவறு.

மனுதாரருக்கு 1995–ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய பதவி உயர்வை 3 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் மாநகராட்சி வசம் வந்தது

Print PDF
தினமலர்         24.05.2013

ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் மாநகராட்சி வசம் வந்தது


சென்னை:கடந்த, 10 ஆண்டுகளாக வழக்கில் சிக்கிய, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மாநகராட்சி வசம் வந்தது. இதையடுத்து, அங்கு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.

ஆலந்தூர் மண்டலம், 161வது வார்டு முருகன் நகரில், 73 சென்ட் நிலத்தை முருகன் என்பவர், 1980ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அனுமதி வாங்கி, பிளாட் போட்டு விற்றார்.

அதில், 8ம் நம்பர் பிளாட், 6 சென்டில் சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டது. தற்போது, அதன் மதிப்பு 1.5 கோடி ரூபாய். அந்த இடத்தை, முருகன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பராமரித்து வந்தது.

அப்போது இருந்த, ஆலந்தூர் நகராட்சி, அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க முயன்றது. இந்த நிலையில், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, சிலர் சொந்தம் கொண்டாடி, 2002ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த மாதம், எதிர்த்தரப்பு மனுவை ஆலந்தூர் முன்சீப் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். புதராக இருந்த அந்த இடத்தை, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை துவக்கினர்.
 


Page 198 of 506