Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருப்பூர் மாநகர பகுதியில் மலிவு விலை உணவகம் கட்டும் பணி அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF
தினத்தந்தி       24.05.2013

திருப்பூர் மாநகர பகுதியில் மலிவு விலை உணவகம் கட்டும் பணி அமைச்சர் நேரில் ஆய்வு


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகம் கட்டும் பணியை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.

மலிவு விலை உணவகம்

தமிழகத்தில் திருப்பூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகம் திறக்க முதல்அமைச்சர் ஜெயல லிதா உத்தரவிட்டு இருந்தார். இதன்அடிப்படையில் திருப் பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதி யில் முதலாவது மண்டல அலுவலகம், ஆத்துப்பாளை யம், பாண்டியன்நகர், 15.வேலம்பாளையம் நக ராட்சி முன்னாள் அலுவலகம், குமரன் வணிக வளாகம், பழைய பஸ் நிலையம், சந்தைப் பேட்டை, சந்திராபுரம், நல்லூர், சின்னச்சாமி அம் மாள் பள்ளி அருகில் என 10 இடங்கள் தேர்வு செய்யப் பட்டு தற்போது மலிவு விலை உணவகத்துக்கு கட்டிடம் கட் டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ரூ.25 லட்சம் மதிப்பில் சமை யல் கூடம், டோக்கன் வினி யோகம் செய்யும் இடம், உணவு வினியோகம் செய்யும் இடம், உணவருந்தும் அறை ஆகியவை காற்றோட் டத்துடன் கட்டப்பட்டு வரு கிறது.

அமைச்சர் ஆய்வு

முதலாவது மண்டல அலு வலகம் அருகே மலிவு விலை உணவகம் கட்டும் பணியை நேற்று காலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் விசா லாட்சி, துணை மேயர் குண சேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், மாநகராட்சி கமிஷனர் செல்வ ராஜ், மாநகர பொறியாளர் ரவி ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.

இதேபோல் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் மலிவு விலை உணவு கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச் சியில் முதலாவது மண்டல உதவி ஆணையாளர் சபி யுல்லா, கவுன்சிலர்கள் சுப்பு, சின்னச்சாமி, கல்பனா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். மலிவு விலை உணவகம் வரு கிற 31ந் தேதி திறக்கும் வகையில் ஏற்பாடு நடந்து வரு வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

சுகாதாரப் பணி: மேயர்கள் ஆய்வு

Print PDF
தினமணி        24.05.2013

சுகாதாரப் பணி: மேயர்கள் ஆய்வு


வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் மேயர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்கள்.

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட படேல் நகர் சட்டப் பேரவைத் தொகுதியின் வார்டுகளில் மேயர் ஆசாத் சிங், துணை மேயர் பூர்ணிமா வித்யாத்ரி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, படேல் நகர் பகுதியில் கழிவு நீர்க் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பல்ஜீத் நகரில் சமுக நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

தெற்கு தில்லி மாநகராட்சியில் சங்கம் விஹாரில் உள்ள அங்கீகாரமற்ற காலனியில் தெற்கு தில்லி மேயர் சரிதா சௌத்ரி ஆய்வு நடத்தி அப்பகுதி மக்களிடம் குறைகளைக்  கேட்டறிந்தார்.

அப்போது, சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, அங்கீகாரமற்ற சங்கம் விஹார் காலனியில் சுகாதார நடிவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

"இரவு நேர பாதுகாப்பகத்தில் ஆதரவற்றோர் தங்க ஏற்பாடு'

Print PDF
தினமணி          24.05.2013

"இரவு நேர பாதுகாப்பகத்தில் ஆதரவற்றோர் தங்க ஏற்பாடு'


நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இரவு நேர பாதுகாப்பகத்தில் தங்குவதற்கு நகராட்சி ஆணையரை ஆதரவற்றோர் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

வீடுகளோ, தங்கும் இடவசதியோ இல்லாமல், சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களை பாதுகாக்க இரவு நேர பாதுகாப்பகங்களைத் தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிபவர்களை பாதுகாக்க, நாகர்கோவில் அனாதை மடத்தில் உள்ள கட்டடத்தில் இரவு நேர காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

இக்காப்பகத்தில் தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த 29 பேர், இம்மாதம் 21-ம் தேதி அங்கு சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை சந்தித்து குறைகள் கேட்கப்பட்டன.

குழந்தைகள் இருந்தும், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் நிலை குறித்து முழுமையாகக் கண்டறியப்படும்.

மேலும் தங்குமிட வசதியுள்ளவர்கள், பாதுகாப்பகத்தில் தங்க விருப்பம் இல்லாதவர்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்து, அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். பாதுகாப்பகத்தில் தங்குவதற்கு நாகர்கோவில் நகராட்சி ஆணையரை அணுகலாம் என்றார் அவர்.
 


Page 199 of 506