Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி இடத்தில் ஆழ்துளை குழாய் பதித்தவருக்கு நோட்டீஸ்

Print PDF
தினமணி          24.05.2013

மாநகராட்சி இடத்தில் ஆழ்துளை குழாய் பதித்தவருக்கு நோட்டீஸ்


 சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் வீட்டின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாய் பதித்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 சேலம் மாநகராட்சி மிட்டாபுதூர் கான்வென்ட் சாலை பகுதியில் குடியிருந்து வரும் கட்டட உரிமையாளர், மாநகராட்சிக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் ஆழ்துளை குழாய் பதிக்கும் பணியை புதன்கிழமை மேற்கொண்டார்.

 தனி நபரின் தண்ணீர் தேவைக்காக மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் ஆழ்துளை குழாய் பதிக்கப்படுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

 இதையடுத்து, அஸ்தம்பட்டி மண்டல உதவி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், நில அளவையரைக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டது. அதில், தனியாரால் ஆழ்துளை குழாய் பதிக்கும் பகுதி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என உறுதிப்படுத்தப்பட்டது.

 இதைத் தொடர்ந்து, ஆழ்துளை குழாய் பதிப்பதை நிறுத்திவிட்டு பொருள்களை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு அந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றனர்.

 ஆனால், அதிகாரிகள் சென்ற பின்னர் மீண்டும் ஆழ்துளை குழாய் பதிக்கும் பணி கட்டட உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் சென்ற அதிகாரிகள் கட்டடத்தின் உரிமையாளரிடம் விதிமீறல் தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அளித்தனர்.

 இந்நிலையில், தனியாரால் சாலை ஓர நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயினை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக மாநகர ஆணையர் எம்.அசோகன் வியாழக்கிழமை அறிவித்தார்.

 மேலும், ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிபம்ப் பொறுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தெரிவித்தார்.
 

அம்மா உணவகம் கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி          24.05.2013

அம்மா உணவகம் கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு


திருப்பூரில் அம்மா உணவகம் அமைப்பதற்காக புதிதாகக் கட்டப்படும் கட்டடப் பணியை அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், டவுன்ஹால் குமரன் வணிக வளாகம் உள்பட  10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, பணியை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான் உள்ளிட்ட உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

குப்பைகளை அகற்ற கட்டணம்:நத்தம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினமணி               24.05.2013

குப்பைகளை அகற்ற கட்டணம்:நத்தம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்


நத்தம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 நத்தம் பேரூராட்சியின் கூட்டம், அதன் தலைவர் விஜயலட்சுமி தனபால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து தலைவர் விஜயலட்சுமி தனபால் பேசியது:

 நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், நாள்தோறும் சுற்றப்புறப் பகுதியிலிருந்து வந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால், பஸ் நிலையம், சாலையோரக் கடை, காய்கறிக் கடை, பூக்கடை, பழக்கடை ஆகியவற்றின் மூலம் அதிமான குப்பைகள் சேர்ந்து வருகின்றன. அவற்றை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த சிரமப்பட்டு வருகிறது.  

 நகரைச் சுத்தமாக வைக்கும் வகையிலும், பேரூராட்சி வருவாயைப் பெருக்கவும் குப்பைகளை அகற்றுவதற்கு கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.       அதன்படி, திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை அகற்றுவதற்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ. 1500, வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ. 250, உணவு விடுதிகளுக்கு மாதம் ஒருமுறை ரூ. 2000 என கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், தள்ளுவண்டிகள், இறைச்சிக் கடைகள், இரவு நேரக் கடைகள் ஆகியவற்றுக்கும் மாதத்துக்கு ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்படும். வியாபாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய கட்டணங்களை செலுத்தினால், பேரூராட்சி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்றார்.
 


Page 200 of 506