Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடைத் திட்டம்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி         22.05.2013

பாதாள சாக்கடைத் திட்டம்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு


விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை நகர்மன்றத் தலைவர் பாஸ்கர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பாதாள சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்துக்கான மதிப்பீடு முதலில் ரூ.35.67 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீடாக ரூ.49.36 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்துக்காக காகுப்பம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிவுற்றுள்ளன.

எருமனந்தாங்கல் பகுதியில் மற்றொரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன.

இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர்மன்றத் தலைவர் பாஸ்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பு கட்டாயம்

Print PDF
தினமணி          22.05.2013

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பு கட்டாயம்

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் மழை நீர் கால்வாய் வசதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார் சென்னை மேயர்.

இன்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் முன்னர் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் நிலத்தடி நீர் உயர வழி  ஏற்பட்டது. இந்தத் திட்டம் தற்போது, விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும். அதனால், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைப்புகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மழைநீர் கால்வாயுடன் கழிவு நீர்க் கால்வாயை இணைத்தால் அந்த இடத்துக்கான  உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார் சென்னை மேயர்.
 

கட்டட இடிபாடுகளில் இருந்துகட்டுமானப் பொருள்கள் தயாரிக்க திட்டம்

Print PDF
தினமணி          22.05.2013

கட்டட இடிபாடுகளில் இருந்துகட்டுமானப் பொருள்கள் தயாரிக்க திட்டம்


சாலையோரம் கொட்டப்படும் கட்டட இடிபாடுகளில் இருந்து கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த கோவை மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், சாலையோரம் கொட்டப்படும் கட்டட இடிபாடுகளில் இருந்து கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கும் செயல்திட்டத்தைக் கேட்டுப் பெற ஏலம் கோர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரயில்வே மேம்பாலங்கள்: கோவை பகுதியில் ரயில்வே கிராசிங்குகள் இருக்கும் 8 இடங்களில் மேம்பாலங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காவிட்டால் மேம்பாலம் கட்டும் பணிக்கான திட்டச் செலவில் 50 சதவீதத்தை மாநகராட்சி ஏற்க வேண்டும். இதனால் மாநகராட்சி சாலைகளில் பணி மேற்கொள்ள நிரந்தரமாக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானத்துக்கு மாமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதேபோல, வ.உ.சி. பார்க் சாலை, நூறடி சாலை, சின்னச்சாமி நாயுடு சாலை ஆகிய இடங்களிலும் மேம்பாலம் கட்டுவதற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


Page 206 of 506