Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆட்டிறைச்சி வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

Print PDF
தினமணி        17.05.2013

ஆட்டிறைச்சி வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை


மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில், அலுவலர்கள் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணா நகர், கே.கே. நகர், தெப்பக்குளம் பகுதிகளிலுள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில், அவரவர் கடைகளிலேயே ஆடுகளை வெட்டி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. அந்தக் கடைகளில் இருந்து 70 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இது குறித்து நகர்நல அலுவலர் யசோதாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்டிறைச்சி வியாபாரிகள் மாநகராட்சிக்கு சொந்தமான ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் ஆடுகளை வெட்டி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மேல் நடவடிக்கைககள் எடுக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.
 

மாநகராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை

Print PDF
தினகரன்                17.05.2013

மாநகராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை


கோவை, : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டு பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

இவைகளால் பொது சுகாதாரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

கோவை மாநகராட்சி மன்ற தீர்மானத்தின்படி (தீர்மான எண் 325, நாள் 27.3.2000), மாநகர எல்லைக்குள் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பன்றி வளர்ப்பவர்கள் உடனடியாக பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 15 நாளுக்குள் அப்புறப்படுத்த தவறினால், பன்றி வளர்க்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா தெரிவித்துள்ளார்.
 

சொத்து வரி புத்தகம் வாங்க காலக்கெடு நீட்டிப்பு

Print PDF
தினகரன்       17.05.2013

சொத்து வரி புத்தகம் வாங்க காலக்கெடு நீட்டிப்பு


கோவை, :மாநகராட்சி சொத்து வரி புத்தகம் வாங்க வரும் 25ம்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாநகராட்சியில் 2008க்கு முன்னர் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் காலியிடங்களுக்கு 2008&09 சொத்து வரி பொது சீராய்வின்போது புதிய சொத்து வரி கேட்பு புத்தகம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில், 2012&13ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை வரி செலுத்த ஏதுவாக பக்கங்கள் இருந்தன. தற்போது, பக்கங்கள் தீர்ந்துவிட்ட நிலையில், பழைய புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் கடந்த 25.4.2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இப்புத்தகங்களை பெற காலநீட்டிப்பு செய்யவேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக் கை யை ஏற்று, வரும் 25.5.2013 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2013&14ம் ஆண்டுக்கு சொத்து வரி செலுத்த, சொத்துவரி புத்தகத்தில் பக்கம் இல்லாத அனைவருக்கும் புதிய சொத்து வரி புத்தகம் வழங்கப்படும்.

அந்தந்த பகுதிகளில் உள் ள வரி வசூல் மையங்கள், வார் டு அலுவலகங்கள், மாந கராட்சி பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்புத்தகங்களை பெறலாம். பழைய புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, புதிய புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
 


Page 209 of 506