Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி                30.01.2014

12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

 மத்திய பேருந்து நிலையம், திருவூடல் தெரு, தேரடி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. எனவே இதுபோன்று சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆணையாளர் பெ.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

 இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் மாலை வரை 12 மாடுகளை துப்புரவுப் பணியாளர்கள் பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்துள்ளனர். ஒவ்வொரு மாடுகளுக்கும் உரிய அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பிறகே அவை மாடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                30.01.2014  

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வந்ததை அடுத்து அவற்றுக்கு சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வேலூர், காட்பாடி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு முறையான அனுமதி உள்ளதா, சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி தொடர்கிறார்களா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

குரங்குகள் தொல்லை ஒழிக்கப்படும்: சாத்தூர் நகர்மன்றக்கூட்டத்தில் தகவல்

Print PDF

தினமணி                30.01.2014  

குரங்குகள் தொல்லை ஒழிக்கப்படும்: சாத்தூர் நகர்மன்றக்கூட்டத்தில் தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் சுற்றித்திரியும் மாடுகள், குரங்குகள் இனி நகர்ப்பகுதிக்குள் வராமல் தடுக்கப்படும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் ஆணையாளர் மணி தெரிவித்தார்.

 சாத்தூர் நகர்மன்றக்கூட்டம் புதன்கிழமை தலைவர் டெய்சிராணி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

  உறுப்பினர் இளங்கோவன்: நகர்ப் பகுதியில் மாடுகள் மற்றும் குரங்குள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும்இடையூறு ஏற்படுகிறது. சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதியில் கார் நிறுத்தும் இடம் அமைக்கப்படவில்லை. அப்படியிருந்தும் நகராட்சி அந்த விடுதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாலித்தீன் பைகள் அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று  மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும்.

  ஆணையாளர்: மாடுகள் மற்றும் குரங்குளை நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்க ஏற்கெனவே கடைகளில் சோதனை நடத்தபட்டுள்ளது. மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் விடுதி செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 கண்ணன்: சாத்தூர் பேருந்து நிலையத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இலவச கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும்.

  ஆணையாளர்: இலவச கழிப்பறைக்கு சரியான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகள் கழிப்பறையை பூட்டிவிட்டு செல்கின்றனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  கூட்டத்தில் பொறியாளர், நகர அமைப்பு அலுவலர், சுகாதாரத் துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 22 of 506