Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பள்ளிக்கரணையில் விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்'

Print PDF

தினமலர்              15.05.2013

பள்ளிக்கரணையில் விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்'


சென்னை:சென்னை பள்ளிக்கரணை பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நான்கு மாடி வணிக கட்டடத்துக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர்.சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில், வி.ஜி.பி., ராஜேஷ் நகரில் மனை எண்: 6ல் உள்ள நிலத்தில், அச்சகம், புத்தகம் பைண்டிங், அச்சு தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் கட்ட, 2011ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது.

ஆனால், இதற்கு மாறாக, மூன்று மற்றும் நான்காவது தளங்கள் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது. இந்த பணிகளை நிறுத்த, கடந்த மார்ச், 15ம் தேதி அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.அதன் பின்னும், கட்டுமான பணிகள் நடந்ததால், கூடுதல் தளங்களை இடிப்பதற்கான நோட்டீஸ், கடந்த மாதம், 4ம் தேதி அளிக்கப்பட்டது.இதற்கும், அந்த உரிமையாளரிடம் இருந்து, எந்த பதிலும் வராத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில், கூடுதலாக கட்டப்பட்ட மூன்று மற்றும் நான்காவது தளங்களுக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று "சீல்' வைத்தனர்.

 

கோவில்பட்டியில் அதிரடி சோதனை திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய 40 மின் மோட்டார்கள் பறிமுதல் தலா ரூ.12 ஆயிரம் அபராதம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்         14.05.2013

கோவில்பட்டியில் அதிரடி சோதனை திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய 40 மின் மோட்டார்கள் பறிமுதல் தலா ரூ.12 ஆயிரம் அபராதம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு


கோவில்பட்டி, : கோவில்பட்டியில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய 40 மின் மோட்டார்களை நகராட்சி பொறியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோவில்பட்டிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதமாக நகரில் 15 அல்லது 18 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீராதாரம் முற்றிலும் குறைந்து விட்டது.  தெருக்களில் உள்ள அடிபம்புகளில் தண்ணீர் வருவதில்லை. பெரும்பாலான மக்கள் டிராக்டர், லாரிகள் மூலம் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் நீண்ட தூரங்களுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று ஒரு குடம் தண்ணீர் ரூ.3 முதல் ரூ.5 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இதற்கிடையே குடிநீர் விநியோகிக்கப்படும் நேரத்தில் சிலர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் வரதராஜன் தலைமையில் பொறியாளர் சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் குறள் செல்வி மற்றும் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

இதில் நடராஜபுரம், காந்திநகர், புதுரோடு, வக்கீல்தெரு, ஜோதிநகர், வஉசி நகர், பசுவந்தனைரோடு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய 40 மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய குடிநீர் இணைப்புதாரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபோல் மோட்டார் வைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது தெரியவந்தால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் வரதராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
 

குடிநீர் இணைப்புகள் கணக்கெடுப்பு

Print PDF
தினமலர்                    13.05.2013

குடிநீர் இணைப்புகள் கணக்கெடுப்பு


பொன்னேரி: பேரூராட்சியில், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.பொன்னேரி பேரூராட்சியில், 18 வார்டுகளில், 6,668 குடியிருப்புகளும், 1,542 வணிக நிறுவனங்களும் உள்ளன. இவற்றில், 2,793 குடிநீர் இணைப்புகள் மட்டுமே பேரூராட்சி கணக்கில் உள்ளன. மீதம் உள்ளவற்றில், பெரும்பாலானவை உரிய அனுமதி இன்றியும், முன் வைப்பு தொகை செலுத்தாமலும், குடிநீர் இணைப்புகள் வைத்து உள்ளன.மாத குடிநீர் கட்டணம் மற்றும் முறையான இணைப்பு கட்டணம் மூலமாக, பேரூராட்சிக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், பொன்னேரி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இது தொடர்பாக கடந்த, 1ம் தேதியன்று, "தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், பொன்னேரி பேரூராட்சியில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் குறித்து, ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது.இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொன்னேரியில் முகாமிட்டு, இருதினங்களாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஒவ்வொரு பேரூராட்சி செயல் அலுவலருக்கும், இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி குடிநீரை பயன்படுத்துபவர்களின் விவரம், அவர்கள் அனுமதி பெற்றுள்ளனரா?, அதற்கான ரசீது வைத்துள்ளனரா? தெருகுழாய்கள் பயன்படுத்துபவர்கள், சொந்தமாக ஆழ்துளை மோட்டார் வைத்திருப்பவர்கள் என, வீடுகள் தோறும் சென்று விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 450க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என, கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்புகள் வைத்திருப்பவர்கள் மீதான, அபராத நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 


Page 213 of 506