Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஜூன் மாதத்திற்குள் கொசுத்தொல்லை குறைக்கப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF
தினத்தந்தி              09.05.2013

ஜூன் மாதத்திற்குள் கொசுத்தொல்லை குறைக்கப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை மாநகரில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொசுக்கள் கழிவு நீர் கலந்துள்ள கூவம்ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற பெரிய நீர்வழிப்பாதைகளிலும் மற்றும் சிறிய நீர்வழிப்பாதைகளிலும், மழைநீர் வடிகால்களிலும் அதிக அளவு உற்பத்தியாகின்றன.

கடந்த மார்ச் 18–ந்தேதி முதல் ரூ.6.76 கோடி செலவில், பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி அனைத்து பெரிய மற்றும் சிறிய நீர்வழிப்பாதைகளிலும், நீர் ஓட்டத்திற்கு தடையாக உள்ள மணல் மேடு, ஆகாயத்தாமரை செடிகள், முட்செடிகள் மற்றும் புற்பூண்டுகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் செய்து, கொசு புழுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து நீர் வழி தடங்களிலும் நீரோட்டம் உறுதி செய்யப்பட்டு கொசுத்தொல்லை வெகுவாக குறைக்கப்படும்.

கொசுப்புழு மற்றும் கொசுத்தடுப்பு பணியில் 238 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்களும் 603 கைத் தெளிப்பான்களும், 65 பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்களும், 8 கட்டுமரங்களும் தினசரி பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொசுத்தொல்லை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

கோபி நகராட்சி அறிவிப்பு

Print PDF
தினமணி       09.05.2013

கோபி நகராட்சி அறிவிப்பு


கோபி நகராட்சிப் பகுதிகளில் குடிநீரைக் காய்ச்சிப் பயன்படுத்துமாறு ஆணையர் பா.ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை:

÷கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள செங்கலக்கரை வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் இருந்து கோபி நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீரின் இருப்பு குறைவாக உள்ளதால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குடிநீருக்காகத் திறந்துவிடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றிலிருந்து நகராட்சிப் பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீரை மக்கள் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும்.
 

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினகரன்       09.05.2013

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


வேலூர், : கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

மண் மீதும் ஆசை, பொன் மீதும் ஆசை இப்படி மனிதனின் ஆசை குணத்துக்கு அளவே இல்லை. சிலர் அரசுக்கு சொந்தமான காலி இடங்களை போட்டி போட்டு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.வேலூரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்கள், பூங்காக்கள், கோயில் இடங்கள் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.

புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பர்மா பஜார் ஆகிய இடங்களில் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்கு மாலையில் நேரத்தில் பார்த்தால் இடம் காலியாக இருக்கும், காலையில் திரும்பி வந்து பார்த்தால் திடீர் கடைகள் முளைத்திருக்கும். பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைகளையும் ஆக்கிரமித்து கொள்கின்றனர். வேலூர் மாநகராட்சியான பிறகும் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகள் பற்றி புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவற்றின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்போதெல்லாம் தெரு கால்வாய்களையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டு ஆக்கிரமிக்கின்றனர். இதன் விளைவு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற இடங்களில் சில நேரம் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினாலும் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்கிறது.

இதேபோல் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 1வது தெருவில் கால்வாய் மீது வீடுகளின் படிக்கட்டுகள் மற்றும் கடைகளுக்கான கட்டிடங்களை கட்டி உள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி வீடுகளில் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. சில தினங்களாக வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் மாநகராட்சியில் புகார் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். சில வீடுகளின் திண்ணைகள், கடைகள், ஆகியவையும் இடிக்கப்பட்டன. அப்போது சிலவீடுகளை சேர்ந்தவர்கள், Ôஒரு நாள் அவகாசம் கொடுங்கள், நாங்களே அகற்றி விடுகிறோம்Õ என்று கூறினர். இதையடுத்து பாதிக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், Ôகால்வாயை அகற்றியதோடு நின்று விடாமல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு கண்காணிக்க வேண்டும்Õ என்றனர்.
 


Page 216 of 506