Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறல் கட்டடத்திற்கு "சீல்'

Print PDF
தினமலர்        08.05.2013

விதிமீறல் கட்டடத்திற்கு "சீல்'


மதுரை: மதுரையில் மற்றொரு விதிமீறல் கட்டடத்திற்கு, நேற்று மாநகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர். மாநகராட்சியில், தொடரும் விதிமீறல் கட்டடங்கள் குறித்தும், அவற்றின் மீதான நடவடிக்கையில் தொய்வு குறித்தும், "தினமலர்' நாளிதழ், கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இதைதொடர்ந்து, நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைத்து வருகின்றனர். மண்டலம் 1க்குட்பட்ட மேலப்பொன்னகரம், சண்முகம்பிள்ளை தோப்பு 3வது தெருவில், புஷ்பலீலா என்பவரது குடியிருப்பு கட்டடத்தில், உதவி கமிஷனர் ரகோபெயாம், உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 520 சதுர அடிக்கு அனுமதி வாங்கிய நிலையில், 820 சதுர அடியில் கட்டடம் கட்டியிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், காலி இடம் விடாமல், கட்டடம் எழுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து, அக்கட்டடத்திற்கு "சீல்' வைக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும், விதிமீறல் கட்டடங்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
 

கோபி நகராட்சி பகுதிகளில் குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் ஆணையாளர் வேண்டுகோள்

Print PDF
தினத்தந்தி       08.05.2013

கோபி நகராட்சி பகுதிகளில் குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் ஆணையாளர் வேண்டுகோள்


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கலகரையின் வழியாக செல்லும் பவானி ஆற்றில் இருந்து கோபி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீரின் இருப்பு குறைவாக உள்ளதால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றில் இருந்து நகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும்.

இந்த தகவலை கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பா.ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
 

விதிமீறல்: கட்டடத்துக்கு "சீல்'

Print PDF
தினமணி         08.05.2013

விதிமீறல்: கட்டடத்துக்கு "சீல்'


மதுரை மேலப்பொன்னகரத்தில் புஷ்பலீலா  மாநகராட்சியில் கட்டட வரைபட அனுமதி பெற்று  கட்டடம் கட்டியுள்ளார்.  இந்நிலையில், அனுமதியை மீறி கூடுதல் அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி,   மாநகராட்சி  அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.
 


Page 218 of 506