Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவையில், அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் கலெக்டர் கருணாகரன் உத்தரவு

Print PDF
தினத்தந்தி          08.05.2013

கோவையில், அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் கலெக்டர் கருணாகரன் உத்தரவு


கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் அளித்து கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

சீல் நடவடிக்கை

கோவை மாவட்டம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற கட்டிடங்கள், விதி மீறல் கட்டிடங்கள் மீது உள்ளூர் திட்டக்குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை கட்டுமானத்துறை கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையில் உறுப்பினர்கள் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கோவை மாவட்டத்தில் கட்டிட வரைமுறைகள் கடந்த காலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆகவே வளர்ந்து வரும் கால நிலைக்கு ஏற்ப அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று எப்.எஸ்.ஐ போன்ற சட்ட விதி தளர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் கோவை பிரதான சாலைகளில் பல வணிக வளாக கட்டிட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

ஆனால் அதற்கு போதிய கால அவகாசம் அளிக்காமல், சீல் வைத்தல் நடவடிக்கை என்பது பல்வேறு இன்னல்களுக்கும், இழப்புக்கும் ஆளாக நேரிடுகிறது. ஆகவே கட்டிடங்களுக்கு பாதுகாப்பு குறைகளை சரி செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

இதை பரிசீலனை செய்த கலெக்டர் கருணாகரன், கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் கட் டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைப்பதை தடுக்க, 15 நாட்கள் கால அவகாசத்துக்குள், அனைத்து கட் டிட உரிமையாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்படி சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் அந்த கட்டிடங்களில் தீத்தடுப்பு, அவசரகால வழி அமைத்து சரி செய்ய வேண்டும்.

2007–ம் ஆண்டுக்கு முன்பு உள்ள கட்டிடங்களுக்கு அரசு விதி தளர்வு செய்து அனுமதிக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி வரைமுறை செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
 

கோவையில் அதிகாரிகள் நடவடிக்கை தொடர்கிறது விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்

Print PDF
தினத்தந்தி        07.05.2013

கோவையில் அதிகாரிகள் நடவடிக்கை தொடர்கிறது விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்


கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்டகளுக்கு  அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விதிமுறை மீறல்கள்


கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் பலியானார்கள். அந்த கட்டிடம் உள்ளூர் திட்டக்குழும விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருந்ததும், போதிய தீத்தடுப்பு சாதனங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைதொடர்ந்து கோவையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மொத்தம் 201 புதிய கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த கட்டிடங்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்

இந்த நிலையில் 5–வது நாளாக  மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை பெரிய கடை வீதியில் கோனியம்மன் கோவில் அருகே உள்ள 2 கட்டிடங்களுக்கும் என்.எச். ரோடு மற்றும் சுக்ரவார்பேட்டையில் தலா ஒரு கட்டிடத்ததககும் நேற்று சீல் வைக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி கட்டிடம் கட்டாதது, பார்க்கிங் இடம் விடாதது ஆகிய விதி மீறல்களுக்காக சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 43 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

201 கட்டிட்ங்களுக்கு சீல் வைத்த பிறகு தீத்தடுப்பு வசதி இல்லாத பழைய கட்டிடங்களையுமம் ஆய்வு செய்ய தாசில்தார் தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர்களின் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
 

பேரூராட்சிகளில் குறைகளை தெரிவிக்க அலைபேசி எண் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

Print PDF
தினமலர்               07.05.2013

பேரூராட்சிகளில் குறைகளை தெரிவிக்க அலைபேசி எண் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்


தாம்பரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், பொதுவான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்களில், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 பேரூராட்சிகள் உள்ளன.   

இந்த பேரூராட்சிகளில் நிலவும் குறைகளை, அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிடையாகவோ சென்று தெரிவிக்க வேண்டும்.இந்த நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை துரிதமாக தெரிவிக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, பொதுவான அலை பேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அலைபேசிகளை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் வைத்திருப்பர்.

பொதுமக்கள் ஏதேனும் குறைகள் குறித்து, புகார் தெரிவிக்க வேண்டும் எனில், இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடிநீர், மின் விளக்கு சம்பந்தமான குறைகளை, குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கலாம். விடுமுறையிலும் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பேரூராட்சி அலைபேசி எண்

அச்சிறுபாக்கம்       8883100142
சிட்லப்பாக்கம்        8883100143
இடைக்கைநாடு      8883100144
கருங்குழி                8883100145
குன்றத்தூர்              8883100146
மாடம்பாக்கம்         8883100147
மாமல்லபுரம்          8883100148
மாங்காடு                8883100149
கூடுவாஞ்சேரி        8883100150
பீர்க்கண்காரணை    8883100151
பெருங்களத்தூர்      8883100152
செம்பாக்கம்            8883100153
ஸ்ரீபெரும்புதூர்        8883100154
திருநீர்மலை           8883100155
திருப்போரூர்          8883100156
திருக்கழுக்குன்றம் 8883100157
உத்திரமேரூர்         8883100158
வாலாஜாபாத்         8883100159
 


Page 219 of 506