Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்

Print PDF

தினகரன்                30.01.2014 

பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்

பூந்தமல்லி, : பூந்தமல்லி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி குடியிருப்புகள், புதிய தொழிற்சாலைகள் கட்டும் பணி நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையில் பூந்தமல்லி நகர அமைப்பு ஆய்வாளர் தினகரன், பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் பூந்தமல்லி லட்சுமி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த ஒரு குடியிருப்பு, பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த உடனடி சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேற்று சீல் வைத்தனர்.

இதுகுறித்து ஆணையர் சுரேந்திர ஷா, நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் கூறுகையில், தமிழ்நாடு நகரமைப்பு உள்கட்டமைப்பு சட்டம் 1971 பிரிவு 56, 57ன்படி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை தொடர்ந்து கண்காணித்து சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றார்.

 

மாநகராட்சி பகுதி காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும்தவறினால் நடவடிக்கை

Print PDF

தினகரன்                29.01.2014 

மாநகராட்சி பகுதி காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும்தவறினால் நடவடிக்கை

திருச்சி, : திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கமிஷனர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலிமனைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இவற்றின் காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே 7 நாட்களுக்குள் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்ற தவறும் காலிமனை உரிமையாளர்கள் மீது சுகாதார நலனுக்கு கேடு விளைவித்ததாக பராமரிப்பு கட்டணம் மற்றும் அபராதத்தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்புடைய காலிமனை சொத்துக்கள் மீது வில்லங்கம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்                29.01.2014  

பிப்ரவரி 1ம்தேதி நடக்கிறது பொதுநல சங்கங்கள் குறை கேட்பு கூட்டம் மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, :  மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் குறைகேட்பு கூட்டம் கடந்த 25ம்தேதி நடத்தப்படுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் வரும் 1ம்தேதி நடத்தப்படுகிறது. அதன்படி மண்டலம் ஒன்று முதல் 8 வரை செயல்பட்டு வரும் பொதுநல சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள் விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும். மண்டலம் 9 முதல் 15 வரையில் செயல்படும் பொதுநல சங்கங்கள் பிரதிநிதிகளுடனான குறைகேட்பு கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கும் நடக்கிறது.

இதில், மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 


Page 23 of 506