Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுகாதாரமில்லாத உணவு: ஹோட்டலுக்கு "சீல்'

Print PDF
தினமணி        05.05.2013

சுகாதாரமில்லாத உணவு: ஹோட்டலுக்கு "சீல்'


கொடைக்கானலில் சுகாதாரமில்லாத உணவை விற்பனை செய்த தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் "சீல் ' வைத்தனர்.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்களில் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் சாலைப் பகுதிகளில் திடீரென நடமாடும் கடைகளும், உணவகங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் தரமில்லாததாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏரிச்சாலைப் பகுதியில் லாஸ்காட் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிற்பகலில் உணவு சாப்பிட்டனர். அவர்களில் 5 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.

இதுகுறித்து அறிந்ததும் கொடைக்கானல் சுகாதாரத் துறை ஆய்வாளர் அசன்முகமது மற்றும் நகராட்சி பணியாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டலுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ஹோட்டலில் சுகாதாரமின்மை மற்றும் பல்வேறு காரணத்தால் அந்த ஹோட்டலைத் தொடர்ந்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டு பூட்டு போட்டனர்.  இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சாகுல்ஹமீது கூறியதாவது: கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அந்த ஹோட்டலில் ஆய்வு செய்யப்பட்டது.

அங்கு சுகாதாரமின்றி இருந்த உணவுப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டன. சுத்தமில்லாத தண்ணீரைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் அனுமதியில்லாமல் ஏரி நீரை மோட்டார் வைத்து ஊறிஞ்சி எடுத்து வந்துள்ளனர். இதனால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பல ஹோட்டல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமில்லாமல் செயல்படும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
 

பரமக்குடியில் குடிநீர் திருட்டு: 25 மின் மோட்டார்கள் பறிமுதல்

Print PDF
தினமணி        05.05.2013

பரமக்குடியில் குடிநீர் திருட்டு: 25 மின் மோட்டார்கள் பறிமுதல்

பரமக்குடி நகரில் வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் திருடியதாக 25 மின்மோட்டார்களை நகராட்சி ஆணையர் கே. அட்ஷயா சனிக்கிழமை பறிமுதல் செய்தார்.

வறட்சி காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் போதிய அளவு வரப்பெறாததால், கள்ளிக்கோட்டை பகுதியில் கிடைக்கும் குடிநீரை நகராட்சி நிர்வாகம் பரமக்குடி நகர் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.

குடிநீர் விநியோகம் செய்யும்போது பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார் பொறுத்தி குடிநீர் எடுத்து வருவதாக நகராட்சிக்குப் புகார்கள் வந்துள்ளன.

இதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கே. அட்ஷயா தலைமையில் பொறியாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளர்கள்  திருவள்ளுவர் நகர், பங்களா சாலை, பள்ளிவாசல் தெரு, திருவரங்கம் மெயின் சாலை ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து வந்த 25 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து ஆணையர் கே. அட்ஷயா கூறுகையில், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொறுத்தி முறைகேடாகக் குடிநீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவரது குடிநீர் இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படுவதுடன், காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.
 

பள்ளிச் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி        05.05.2013

பள்ளிச் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு


குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மே 6-ஆம் தேதிக்குள் அகற்றிக் கொள்ளுமாறு, சம்பந்தப்பட்டவர்களை நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குமாரபாளயம் நகராட்சிக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பிலே  அகற்றிக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், நகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் அதற்கு ஆகும் செலவுத் தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
Last Updated on Monday, 06 May 2013 07:34
 


Page 221 of 506