Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அரிமளம் பேரூராட்சியில் துப்புரவுப் பணி வாய்ப்பு

Print PDF
தினமணி        05.05.2013

அரிமளம் பேரூராட்சியில் துப்புரவுப் பணி வாய்ப்பு


புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள துப்புரவுப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பகம் மூலம் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை மே 8 -ம் தேதி சரிபார்க்கலாம்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) வெ. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்ததுடன் துப்புரவுப் பணியாளராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.4.2013 - அன்று தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 35 -ம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 32 -ம், பகிரங்கப்போட்டியினருக்கு 30 வயதும் இருக்க வேண்டும்.

உத்தேச பதிவு மூப்பு: ஆதிதிராவிடர் (பெண்கள்) முன்னுரிமை உள்ளவர்கள் (கலப்புத் திருமண தம்பதியர் நீங்கலாக) - துப்புரவு பணியாளராக 30.4.2013 வரை பதிவு செய்துள்ளவர்கள்.

அனைத்துப் பிரிவினர் (பொது) முன்னுரிமை உள்ளவர்கள் (கலப்புத் திருமண தம்பதியர் நீங்கலாக) - முன்னாள் நிறுவனத்தினர்- 27.12.2000 -க்குள் பதிவு செய்தவர்கள்.

ஆதரவற்ற விதவைகள் - 23.2.2007 -க்குள் பதிவு செய்தவர்கள். உடல் ஊனமுற்றவர்கள் - 3.9.1996 -க்குள் பதிவு செய்தவர்கள் மட்டும்.
Last Updated on Monday, 06 May 2013 07:55
 

பசுமை வீடு திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது

Print PDF

தினபூமி              04.05.2013

பசுமை வீடு திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது

http://www.thinaboomi.com/sites/default/files/Mini-Munusamy(C)_2.jpg 

சென்னை, மே.4 - பசுமை வீடு திட்டத்திற்கு 2013-14-ம் ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் கூறியதாவது:-

தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் குளச்சல் தொகுதிக்கு வீடுகள் கட்டித் தர அரசு ஆவன செய்யுமா என்றார்.

அதற்குப் பதிலளித்து அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1.80 இலட்சம் அலகுத் தொகையில் 2011-12 ஆம் ஆண்டில் 101 வீடுகளும், 2012-13 ஆம் ஆண்டில் 120 வீடுகளும் ஆக மொத்தம் 221 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 2013-14 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றது என்றார்.

 

சமாதிகள் எழுப்ப புதிய கட்டுப்பாடுகள்!

Print PDF
தினமணி        04.05.2013

சமாதிகள் எழுப்ப புதிய கட்டுப்பாடுகள்!


உதகை நகராட்சிப் பகுதி மயானங்களில் உள்ள சமாதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார் கூறியது:

உதகை நகராட்சிக்கு சொந்தமான மயானங்களில் சமாதிகள் உள்ளன. இந்த சமாதிகளை எழுப்புவதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற்றிருப்பின், நகராட்சியால் வழங்கப்பட்ட உத்தரவினை உடனடியாக நகர்மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உத்தரவுகளை சமர்ப்பிக்கத் தவறினால், மயானங்களில் எழுப்பப்பட்டுள்ள சமாதிகள் அப்புறப்படுத்தப்படும். மேலும் சமாதிகள் எழுப்புவதால் எதிர்கால தேவைக்கு இடமில்லாமல் போக வாய்ப்புள்ளதால், இனிவரும் காலங்களில் நகராட்சிக்குச் சொந்தமான மயானங்களில் சமாதி எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 


Page 222 of 506