Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பம்மல் நகராட்சியில் 32 கல் குவாரிகளுக்கு பூட்டு

Print PDF
தினமலர்                02.05.2013

பம்மல் நகராட்சியில் 32 கல் குவாரிகளுக்கு பூட்டு


பல்லாவரம்:பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட, சங்கர் நகர், காமராஜபுரம் பகுதிகளில் இயங்கி வரும், 32 கல் குவாரிகளை மூட, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.பல்லாவரம் அடுத்து, பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து, 500 மீ., தூரத்தில் தான் இயங்க வேண்டும்.ஆனால், குறிப்பிட்ட தூரத்திற்கு உள்ளேயே இவை இயங்கி வருவதால், பகுதிவாசிகள், பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவானது.இதை தொடர்ந்து, இந்த கல் குவாரிகளை மூட வலியுறுத்தி, கடந்தாண்டு ஜூலையில், பம்மல்ஸ்ரீசங்கரா நகர் நல்வாழ்வு சங்கம் சார்பில், ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு, முதல்வரின் தனிப் பிரிவில் அளிக்கப்பட்டது.அதன் எதிரொலியாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தற்போது, 32 கல் குவாரிகளை மூடுவதற்கும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டுள்ளது.அந்த பகுதியில் இயங்கும், 49 கல் குவாரிகளில், 13 குவாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. அவை, மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை, முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வாரியம், அறிவுறுத்தி உள்ளது.
 

கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 39 கட்டிடங்களுக்கு ‘சீல்’ அதிகாரிகள் தகவல்

Print PDF
தினத்தந்தி         02.05.2013

கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 39 கட்டிடங்களுக்கு ‘சீல்’ அதிகாரிகள் தகவல்


கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள் பலியானார்கள். அந்த வணிக வளாகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த வணிக வளாகத்தை இடிக்க உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதுபோன்று மாவட்டம் முழுவதும் 201 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவைகள் அனைத்தையும் சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருக்கும் பொதுகட்டிடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

குழுக்கள் அமைப்பு

இதைத் தொடர்ந்து கோவை மாநகரம், மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பொது கட்டிடங்களை கணக்கெடுக்க 14 தாசில்தார்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை, நகரமைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் 55 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்தது. அவற்றை சீல்வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று திருச்சி ரோட்டில் உள்ள ஒரு கட்டிடம் உள்பட 3 கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

39 கட்டிடங்களுக்கு சீல்

கலெக்டர் உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் முதல் நாளில் 12 வணிக வளாகங்களுக்கும், 2–வது நாளில் 15 கட்டிடங்களுக்கும், 3–வது நாளில் 9 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இன்று (நேற்று) 3 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் 14 கட்டிடங்கள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் வங்கிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வருவதால் அவற்றை 15 நாட்களுக்குள்ளும், கடைகளை 24 மணி நேரத்தில் காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. கொடுக்கப்பட்டு உள்ள நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால் வருகிற 7–ந் தேதிக்குள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

கோவில்பட்டி கடைகளில் மாம்பழங்கள்பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினமணி                  30.04.2013

கோவில்பட்டி கடைகளில் மாம்பழங்கள்பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை


கோவில்பட்டி நகராட்சி தினசரிச் சந்தை மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது ரசாயனம் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காமாட்சி கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தனி வட்டாட்சியர் வீராசாமி மற்றும் ஊழியர்கள் கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்தனர்.  இதில், நகராட்சி தினசரி சந்தையில் உள்ள மாம்பழ குடோன்களை தணிக்கை செய்ததில் கார்பைடு  ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  அந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல, கடைகளில் ஆய்வு செய்ததில் அங்கீகரிக்கப்பட்ட நிறம் உபயோகிக்கப் படுத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட 100 கிலோ அப்பளங்கள், காலாவதியான சுமார் 25 கிலோ  தரமற்ற உணவுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டன.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்:  பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்ததில் சில்லறை விற்பனை விலையைவிடந்க் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

அதையடுத்து அந்த கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேருந்து நிலைய வளாகத்திற்குள் இறந்த மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
 


Page 224 of 506