Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிப்பு'

Print PDF
தினமணி       27.04.2013

"மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிப்பு'

சிவகாசி நகராட்சிப் பகுதியில், மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து கூறியுள்ளார்.

இது குறித்த அவரது செய்தி குறிப்பு:

சிவகாசி நகரில் தற்போது 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை வறண்டு விட்டது.  வறட்சியான நேரத்திலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சிலர்,   குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதாக  தகவல் கிடைத்துள்ளது.

குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில்,  மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்.
 

நகராட்சிப் பகுதியில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம்

Print PDF
தினமணி       27.04.2013

நகராட்சிப் பகுதியில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம்


பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வி. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள், வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்கள், பஸ் நிலையம், மார்க்கெட், கடைவீதி மற்றும் முக்கிய வீதிகளில் மாடுகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. இது சம்பந்தமாக, பொதுமக்கள், நுகர்வோர்கள் மற்றும் காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏராளமான புகார்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன.

எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான மாடுகளை தங்களது பராமரிப்பில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

தவறும்பட்சத்தில், நகராட்சி பணியாளர்களைக் கொண்டு மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்துவதுடன், உரிய அபராதத் தொகையும் வசூலிக்கப்படும்.

மேலும், சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

ஒரு வீட்டுக்கு பல சொத்துவரிகள் வசூலித்தால் புகார் அளிக்கலாம்

Print PDF
தினமணி       27.04.2013

ஒரு வீட்டுக்கு பல சொத்துவரிகள் வசூலித்தால் புகார் அளிக்கலாம்


ஒரு கதவு எண் கொண்ட அடுக்கு வீடுகளுக்கு பல சொத்து வரிகள் வசூல் செய்வது குறித்து மனு அளித்தால் ஆய்வு செய்யப்படும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் (வார்டு 9) மு. தனரமேஷ் (படம்) கேள்வி எழுப்பினார். திருவொற்றியூர் மற்றும் கத்திவாக்கம் பகுதிகள் நகராட்சியாக இருந்தபோது, ஒரு கதவு எண் கொண்ட வீட்டுக்கு கீழ்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு வரி மதிப்பீட்டு எண்கள் கொடுக்கப்பட்டு தனித்தனியாக சொத்துவரி வசூல் செய்யப்பட்டது.

இந்த முறை ரத்து செய்யப்படுமா என்று அவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மேயர், ஒரே வீட்டுக்கு பல வரிகளை செலுத்துவதால் உரிமையாளர்கள் இன்னல்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், ஒரே சொத்துவரியாக மதிப்பீடு செய்யக் கோரி வருவாய்துறையிடம் மனு அளித்தால், கள ஆய்வு செய்து ஒரே சொத்துவரியாக மதிப்பிடப்படும் என்றார்.
 


Page 227 of 506