Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல்

Print PDF
தினமலர்        26.04.2013

குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல்

திருச்சி: "குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்' என்று மேயர் ஜெயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் மக்கள்குறைதீர் கூட்டம் நடந்தது. மாநகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 25 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கு பதில் அனுப்ப மேயர் ஜெயா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோடைக்காலத்தில் எதிர்பாரதவிதமாக நிலவிவரும் நிலத்தடி நீர் குறைவின் காரணமாக, பொதுமக்களுக்கு வினியோகப்படும் குடிநீர் வினியோகம் சமச்சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் இணைப்புகளிலிருந்து நீர் உறிஞ்சுவதாக புகார்கள் வந்துள்ளன.மாநகராட்சி சட்டப்படி, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக சோதனை நடத்தி, குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்.

அடைப்பான்கள் இல்லாமல் வீணாக வெளியேறும் பொது குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்.எனவே, மாநகர மக்கள் மாநகராட்சியால் வினியோகப்படும் குடிநீரை தேவைக்கேற்பவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவேண்டும் என்று மேயர் தெரிவித்தார். கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக் மீரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை செய்த 8 பேருக்கு அபராதம் விதிப்பு

Print PDF
தினமலர்        26.04.2013

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை செய்த 8 பேருக்கு அபராதம் விதிப்பு


நரசிங்கபுரம்: ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், மகாவீர் ஜெயந்தி தினத்தில், இறைச்சி விற்பனை செய்த, எட்டு பேருக்கு, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.மகாவீர் ஜெயந்தி தினமான, நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் மதுபானம், இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில், இறைச்சி விற்பனை கனஜோராக நடந்தது.
 
மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, ஆத்தூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளுக்கு சென்று, இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என, எச்சரிக்கை செய்தனர்.தொடர்ந்து, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, சுகாதார அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதையடுத்து, ஆத்தூரில், 16 கடைகள், நரசிங்கபுரத்தில், 12 கடைகள் என, மொத்தம், 28 இறைச்ச கடைகளுக்கு, நோட்டீஸ் வழங்கினர்.
 
இதில், இறைச்சி விற்பனை செய்த, நரசிங்கபுரம் குணசேகரன், காமராஜ், சேகர், கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், முருகேசன், ஆத்தூர் தியாகராஜன், இதயதுல்லா ஆகிய எட்டு பேருக்கு, தலா, 500 ரூபாய் வீதம், மொத்தம், 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.ஆத்தூர் நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி தினத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் இறைச்சி விற்பனை செய்தபோதும், ஒரு சிலருக்கு மட்டும், "அபராதம்' விதிக்கப்பட்டுள்ளது என, புகார் எழுந்துள்ளது.
 

நகராட்சி நிர்வாக ஆணையர் திண்டிவனம் நகரில் ஆய்வு

Print PDF
தினமலர்                  26.04.2013

நகராட்சி நிர்வாக ஆணையர் திண்டிவனம் நகரில் ஆய்வு


திண்டிவனம்:திண்டிவனம் நகரில் குடிநீர் பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் நடராஜன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் திண்டிவனத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.திண்டிவனம் நகரில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்துளை குழாய் கிணறுகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்பு ரெட்டணை நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.திண்டிவனம் நகராட்சி தலைவர் வெங்கடேசன், ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் கிருஷ்ணராஜ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், கவுன்சிலர்கள் பாலச்சந்திரன், முரளிதாஸ் உடன் சென்றனர்.
 


Page 230 of 506